இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 2017 ஆம் ஆண்டு இபே இந்திய விற்பனைத் தளத்தை வாங்கியது, ஆனால் தற்போது இதனை மூடிவிட்டு இதற்கு மாற்றாக புதிய தளத்தை அறிமுகம் செய்யதுள்ளது பிளிப்கார்ட்.

இப்புதிய விற்பனைத் தளத்திற்கு 2GUD (www.2gud.com) எனப் பெயரிடப்பட்டடுள்ளது.

இதன் மூலம் பழைய பொருட்களைப் புதுப்பித்து விற்பனை செய்யும் இவ்வணிகத்தில் ப்ளிப்கார்ட் நிறுவனம் முதன்முறையாக இறங்குகிறது.

தற்போதைக்கு 2GUD தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் போன்றவை மட்டுமே விற்கப்படும். விரைவில் வீட்டு உபயோகப் பொருட்களும் இத்தளத்தில் விற்கப்படும்.

இத்தளத்தில் வாங்கப்படும் பொருட்களுக்கு மூன்று மாதங்கள் முதல் ஓராண்டு வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்