மிகப் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தளங்களான ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் புது புதுத் திட்டங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

அதில் தற்போது ப்ளிப்கார்ட், அமேசான் நிறுவனத்தின் அமேசான் ப்ரைம் திட்டத்திற்கு போட்டியாக ப்ளிப்கார்ட் ப்ளஸ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தயுள்ளது.

ப்ளிப்கார்ட் ப்ளஸின் சில சிறப்பு அம்சங்கள்

  • இது இலவச விரைவு டெலிவரியை அளிக்கிறது.
  • ப்ளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனை நாட்களில் சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் தின விற்பனை மற்றும் பிக் ஷாப்பிங் தின விற்பனை போன்றவை.

அமேசானின் ப்ரைமிக்கும், ப்ளிப்கார்டின் ப்ளஸ்-க்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை பார்ப்போம்.

அமேசான் வாடிக்கையாளர்கள் மாதம் அல்லது வருட சந்தா செலுத்தி அமேசான் ப்ரைம் திட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.

ப்ளிப்கார்ட்டில் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும், ரிவார்ட் பாயின்ட்ஸ் அளிக்கப்படும், இவை பிளஸ் காயின்ஸ் என்ற பெயரில் டிஜிட்டல் பணமாக உங்கள் ப்ளிப்கார்டின் அக்கௌன்ட்-டில் சேமிக்கப்படும். இதனை நீங்கள் விரும்பும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்திட்டம் வரும் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அறிமுகம் படுத்தப்பட இருக்கிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்