புதிய இயங்குதளங்களில் கூகுள் பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்ற செய்தி வந்துள்ளது,

கூகிள் நிறுவனம், Chrome OS மற்றும் ஆண்ட்ராய்டு OS-க்கு மாற்றாக புதிய OS-ஐ களமிறக்கவுள்ளது. இதற்கு Fuchsia என்ற பெயர் வைக்கப்பபட்டுள்ளது.

Fuchsia பற்றிய அறிக்கையை Bloomberg என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது, இதன்படி இதில் 100 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கடந்த இரு ஆண்டுகளாக இதற்காக பணி புரிந்து வருகின்றனர் என்ற தகவல் உள்ளது.

இந்த புதிய இயங்குதளம் Fuchsia, ஆண்ட்ராய்டு OS-இல் உள்ள சில பிரச்சனைகளை சரி செய்யும் என நம்பப்படுகிறது.

உதாரணமாக, ஐபோன் மென்பொருளை போன்று அண்ட்ராய்டின் ஜாவா ஸ்கிரிப்ட் பயன்பாடு மென்மையாக இல்லை என்ற குற்றசாட்டு உள்ளது.

மிக விரைவில் Fuchsia OS பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்