நீங்கள் சில நேரம் இன்டர்நெட்ஐ பயன்படுத்த முடியாவிட்டால் என்ன செய்வீர்கள்.

ஆம் இப்போது ஒரு சில நிமிடங்களுக்கு முழு உலகமும் ஆப்லைனில் போக போகிறது, உலகளாவிய இணைய பணிநிறுத்தம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. இதன் முடிவு பயங்கரமானதாக இருக்கக்கூடும்.

Russia Today வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சில புதுப்பித்தல் மற்றும் பராமரிப்புகளை நிறைவேற்றுவதற்காக இணைய சேவைகள் அடுத்த 48 மணி நேரத்தின் சில நிமிடங்களுக்கு அணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் இந்த உலகளாவிய இணைய பணிநிறுத்தத்தின் தாக்கம் பல பயனர்களை பாதிக்காது என்று ICANN (The Internet Corporation of Assigned Names and Numbers) தெளிவுபடுத்தியுள்ளது.

DNS (Domain Name System) என்று அழைக்கப்படும் இணைய முகவரி புத்தகத்தை பாதுகாப்பதற்கு இதில் உள்ள கிரிப்டோகிராபிக் கீகளை (Cryptographic key) மாற்றுவதற்கான பராமரிப்பு பணியை ICANN செய்கிறது.

இன்டர்நெட் நிறுத்தப்பட்டால் இப்போது என்ன நடக்கும்

துவக்கத்தில், குறிப்பிட்ட கால அளவுக்கு இணைப்பு பிரச்சினைகள் இருக்கும் என்பதால் வாட்ஸாப், பேஸ்புக், மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற மொபைல் செயலிகளின் பயன்பாடுகள் பாதிக்கப்படும். மேலும் வங்கியின் ஆன்லைன் பயன்பாடுகளும் பாதிக்கப்படும் என்பதால் முக்கியமான வங்கி பண பரிவர்த்தனைகளை தற்போதே செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்