ஜிமெய்லில் நாம் தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை டெலிட் செய்யும் வசதியை ஆண்டிராய்டு பயனர்களுக்கு கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டிலிருந்து சோதனை முயற்சியில் இருந்த இந்த வசதி தற்போது ஆண்டிராய்டு மொபைல்களில் அறிமுகமாகிறது.

இப்புதிய அம்சம் ஜிமெயில் செயலியின் 8.7 பதிப்பில் கிடைக்கிறது.

இது எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்

நாம் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், சில விநாடிகளுக்கு, திரையின் அடிப்பகுதியில் ஒரு ‘செயல் தவிர்’ (Undo) விருப்பம் தோன்றும்.

நீங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் Draft-க்கு திருப்பி அனுப்ப படுவீர்கள், இங்கு தேவையான மாற்றங்களை நீங்கள் செய்யலாம்.

மேலும், மின்னஞ்சல் அனுப்பப்பட்டாலும் கூட, ‘செயல் தவிர்’ (Undo) விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் பெறுநர் மின்னஞ்சல் பெறுவதை உங்களால் நிறுத்த முடியும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்