உலகின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் போக்குவரத்து மிக முக்கிய பங்கினை வகிக்கிறது, குறிப்பிட்டு சொல்ல போனால் ரயில் போக்குவரத்து. இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை நம்பி உள்ளனர்.

இதனை நன்கு உணர்ந்த கூகுள் நிறுவனம், தற்போது அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் Where is my Train என்ற செயலியையும் அதனை வடிவமைத்த Sigmoid Labs என்ற நிறுவனத்தை கைப்பற்றி உள்ளது.

இந்தச் செயலி, தமிழ் உட்பட 8 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. இதனை இணையச் சேவை இல்லாத நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே இது பயனாளிகளுக்கு ரயிலில் பயணத்தின் போது உதவிக் கரமாக இருக்கும். இதுவரை இச்செயலியை ஒரு கோடிக்கும் அதிகமானோர் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் உள்ள சில சிறப்பு அம்சங்கள்

  • இச்செயலியின் மூலம், ரயில் ஒரு ரயில் நிலையத்தின் எந்தெந்த நடைமேடைகளில் நிற்கும் என்பதை அறிய முடியும்.
  • ரயிலில் உள்ள ரயில் பெட்டிகள் எந்த வரிசையில் இருக்கும் என்பதை குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும்.
  • இந்த நிமிடத்தில் நாம் பயணிக்கும் ரயில் எங்கே இருக்கிறது என்ற தகவலை பெற முடியும்.
  • மேலும் குறிப்பாக, ரயில் போக்குவரத்து சார்ந்த முக்கியத் தகவல்களான seat availability போன்ற அனைத்து தகவல்களையும் இந்த செயலியிலேயே பெற்று விட முடியும்.

இதில் இருந்த இத்தனை சிறப்பு அம்சங்களை அறிந்த கூகுள் நிறுவனம், இதை விலைக்கு வாங்கியுள்ளது. இது கூகுளின் Next Billion users என்ற திட்டத்தின் கீழ் நிகழ்ந்துள்ளது. இது போன்று தான் இதற்கு முன்னர் கூகுள், ஜிமெயில், மேப்ஸ், யூடியூப் போன்ற சேவைகளை கைப்பற்றியது. இவை அனைத்தும் இன்று 100 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை கொண்டுள்ளன.

Sigmoid Labs நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூகுள் நிறுவனத்துடனான இணைவது பல முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

யார் இந்த சிக்மாய்ட் லேப்ஸ் (Sigmoid Labs)

அமெரிக்காவை சேர்ந்த டிவாவ் (TiVo) என்ற தொழில்நுட்ப பொழுதுபோக்கு நிறுவனத்தில் பணிபுரிந்த ஐந்து பேர் இணைந்து பெங்களூருவில் சிக்மாய்ட் லேப்ஸ் என்ற நிறுவனத்தை 2013-ம் ஆண்டு ஆரம்பித்தனர், இந்நிறுவனமே “வேர் இஸ் மை ட்ரைன்” என்ற செயலியை உருவாக்கியது.

தற்போது இந்தச் செயலி, ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் மட்டுமே கிடைக்கிறது, விரைவில் ஐஓஎஸ் இயங்கு தளத்திற்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கான Where is my Train என்ற செயலியை டவுன்லோட் செய்ய Where is my Train : Indian Railway Train Status இங்கே கிளிக் செய்யவும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்