தற்போது உள்ள virtual அசிஸ்டன்ட்களில், கூகுள் அசிஸ்டன்டை (Google Assistant) அடிப்பதற்கு ஆள் இல்லை என்று தான் கூற வேண்டும், அதற்கேற்றார் போல் உள்ளது அதன் பயன்பாடு.

அவற்றில் சில தந்திரங்களை குறித்து காண்போம்

குறிப்பு:- “Ok Google” என்ற கட்டளையை கூகிள் உதவியாளரை அழைப்பதற்கு முதலில் பயன்படுத்தி கொள்ளவும்.

1. How to select Your Favorite Google Assistant Voice

கூகிள் அசிஸ்டன்ட் ஒரு அமெரிக்க உச்சரிப்புடன் கூடிய பெண் குரலைக் கொண்டு இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும், நீங்கள் அதை விரும்பவில்லை என்றால் அதன் குரலை மாற்ற முடியும்.

Settings -> Preferences -> Assistant Voice

2. Identify Songs

கூகிள் உதவியாளரின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்று, பாடல்களைக் கண்டறிவதற்கான திறனாகும்.

“Ok Google, identify this song”

என்ற கட்டளையின் மூலம், நாம் கூறும் பாடல் குறித்த தகவல்களை பெற முடியும்.

3. Currency Conversions

Currency Conversion பயன்பாடுகளுக்கு கூகிள் அசிஸ்டன்ட்டின் உதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக “Hey Google, convert $12 into INR”

4. Take and share screenshots

கூகிள் உதவியாளரிடம் “Take a screenshot” or “Share a screenshot” என்று கூறினால் போதும், இது எளிதாக
Screenshot-ஐ எடுத்து தந்து விடும்.

இதன் மூலம் இத்தகவலை நீங்கள் ஒருவருக்கு பகிரலாம்.

5. Listen to the news

கூகிள் அசிஸ்டன்டிடம் “tell me the news” என்று கூறினால், உங்களுக்கு பிடித்த சமீபத்திய தலைப்புகளின் செய்தி சுருக்கத்தை அறிவிக்கும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்