இண்டர்நெட்டை குழந்தைகள் பாதுகாப்பாக பயன்படுத்த, கூகிள் நிறுவனம் Family Link (குடும்ப இணைப்பு) எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாட்டைக் கவனிக்க இது உதவுகிறது.

இதன் மூலம் குழந்தைகள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் தரவிறக்கம் செய்யக்கூடிய செயலிகள் குறித்த தகவல்கள் மற்றும் இண்டர்நெட்டில் அவர்கள் செலவழிக்கும் நேரத்தை குறித்த தகவல்களை பெற்றோர்கள் அறிய முடியும்.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குத்தளங்களில் இச்செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்த முதலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு என ஒரு கூகுள் கணக்கை உருவாக்க வேண்டும், இது Family Link செயலியுடன் இணைக்கப்பட்டுருக்க வேண்டும்.

கடைசியாக இதன் சிறப்பு அம்சம், பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் சாதனத்தை தொலைவிலிருந்தே (Remotely lock) தடுக்க முடியும்.

இந்தியாவைச் சேர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இதன் பயன்பாடு தொடங்கப்பட்டடுள்ளது.

ஆண்ட்ராய்டுக்கான மொபைல் செயலியை பதிவிறக்க Google Family Link for parents

2 thoughts on “கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள நோட்டமிடும் செயலி நீங்களும் பயன்படுத்தலாம்”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்