ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் கூகுளின் G-board பற்றி தெரிந்திருக்கும், தற்போது அதன் புதிய அப்டேட்டட் வெர்ஷனை அறிமுகப்படுத்திருக்கிறது கூகுள்.

இந்த அப்டேட்டட் வெர்ஷனில் Floating Keyboard எனப்படும் வசதி உள்ளது, அதென்ன Floating கீபோர்டு என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும், அதைப் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துக் கொள்வோம்.

Floating கீபோர்டு வசதியைப் பெற நீங்கள் உங்கள் G-board ஐ அப்டேட் செய்து கொள்ளவும், இதன் லேட்டஸ்ட் வெர்ஷன் GBoard 7.6 ஆகும். பொதுவாக மொபைலின் கீழ்ப்பகுதியில் தான் கீபோர்டு உள்ளதைப் பார்த்திருப்பீர்கள், இனிமேல் கீபோர்டை உங்கள் வசதிக்கேற்ப திரையில் நீங்கள் இடம்மாற்றிக்கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு பயனாளிகள் G கீபோர்டினை பதிவிறக்கம் செய்ய Gboard – The Google Keyboard

GBoard ன் ஓரத்தில் G என்ற ஐகான் இருக்கும் இதை க்ளிக் செய்தால் மூன்று புள்ளிகள் கொண்ட மெனு ஒன்று ஓபன் ஆகும்.

அடுத்து Floating என்ற ஆப்ஷனை பார்ப்பீர்கள் இதை க்ளிக் செய்தால் போதும். புதிய Floating கீபோர்டு ஆப்ஷன் உங்கள் திரையில் தோன்றும் இதன் அளவையும், இடத்தையும் உங்கள் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கலாம்.

ஒருவேளை நீங்கள் இதை விரும்பவில்லை என்றால் G ஐகானை மீண்டும் க்ளிக் செய்து பழைய நிலைக்கே மாற்றிக்கொள்ளலாம்.

iOS இயங்கு தளத்திற்கு GBoard எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் கூகுளின் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. அண்ட்ராய்டு பயனாளிகள் நீங்கள் இன்னும் இதற்கான அப்டேட்டை பெறவில்லை என்றால், கூகிள் அதை விரைவில் உங்கள் மொபைல் சாதனத்திற்கு அறிமுகப்படுத்தும். மேலும் தற்போது கூகுளின் G-board பல மொழிகளை ஆதரிக்கிறது, இதற்கிடையில் வெர்ஷன் 7.6 இல் இன்னும் பல அம்சங்கள் சோதனை முயற்சியில் உள்ளன.

Android Police வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் Halloween பண்டிகைக்கு முன்னால் GBoard ல் ஹாலோவின் GIF க்கள் சேர்க்கப்படும் என தெரிகிறது.

ஒருவேளை நீங்கள் இதன் புதிய அம்சங்களை அனுபவிக்க விரும்பினால், இதன் APK பைலை APK Mirror லிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான லிங்க் கீழே உள்ளது பயன்படுத்திக் கொள்ளவும்.

Download the APK file

குறிப்பு:- கூகுளின் GBoard க்கு போட்டியாக இருக்கும் SwiftKey கீபோர்டில் ஏற்கனவே Floating கீபோர்டு ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

சரி, உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனின் கீபோர்டினை மாற்றுவது எப்படி

STEP 1: Google Play இலிருந்து புதிய கீபோர்டினை (Gboard/SwiftKey) பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.

STEP 2: அடுத்து உங்கள் மொபைலின் Settings பகுதிக்குச் செல்லவும்.

STEP 3: இதில் Languages and input என்ற ஆப்ஷனை கண்டுப்பிடிக்கவும்.

STEP 4: இதில் தற்போது பயன்படுத்தும் கீபோர்டினை தட்டவும்.

STEP 5: அடுத்து நீங்கள் இன்ஸ்டால் செய்துள்ள கீபோர்டினை தேர்வுசெய்யுங்கள்.

STEP 6: திரையில் தோன்றும் தகவலை சரிபார்த்து OK என்பதை கிளிக் செய்யவும்.

தற்போது நீங்கள் உங்கள் புதிய கீபோர்டினை பயன்படுத்தி மகிழலாம், ஒருவேளை நீங்கள் இதனை விரும்பவில்லை என்றால் மீண்டும் பழைய நிலைமைக்கு வர இதே செயல்முறையை பயன்படுத்தவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்