நாம் இந்நாள் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகளுக்கும் மேலும் வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற மெசேஜிங் சேவைகளுக்கும் போட்டியாக வரவிருக்கிறது RCS.

இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு, குறிப்பாக இன்று சுமார் 200 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்கள் இந்த ஆண்ட்ராய்டில் இயங்கு தளத்தை கொண்டுள்ளன. இதெற்கெல்லாம் மைய புள்ளியாக இருப்பது உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களுள் ஒன்றான கூகுள். என்ன தான் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும் மெசேஜிங் சேவையில் குறிப்பிட்ட அளவு வெற்றியை பெற முடியவில்லை.

மெசேஜிங் சேவையில் கூகுள் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகள்

2005 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் முதன்முதலில் கூகுள் டாக் (Google Talk) என்ற வசதியை அறிமுகப்படுத்தியது. பின்னாளில் ஆண்ட்ராய்டின் வரவுக்கு பின்பு கூகுள் டாக் சேவையை SMS அனுப்பும் வசதியுடன் இணைத்தது கூகுள் நிறுவனம். பின்னர் இதற்கு அடுத்து 2011 ஆம் ஆண்டு கூகுள் ஹேங்அவுட் வசதியை அறிமுகம் செய்தது. இதுவும் மெசேஜிங் சேவைக்காக பயன்பட்டது.

அதற்குள் ஆண்ட்ராய்டு மெசேஜ் (Android Messages) என்ற சேவையை அறிமுகப்படுத்தியது கூகுள், எனினும் இது போதிய அளவு வெற்றியினை அடையவில்லை, இறுதியாக இன்ஸ்டன்ட் மெசேஜிங் மற்றும் வீடியோ சாட்டிங்கிற்காக, கூகுள் அலோ மற்றும் டூயோ எனும் இரண்டு செயலிகளை அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம். இதில் டூயோ ஓரளவு வெற்றி பெற்று பெரும்பாலனோரால் பயன்படுத்தப்படுகிறது.

எனினும் வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற மெசேஜிங் சேவைகளுக்கும் போட்டியளிக்க முடியவில்லை. இதனால் மெசேஜிங் சேவையை மக்களுக்கு சிறப்பானதாக அளிக்க மேலும் பல சோதனைகளை முயற்சி செய்து வந்தது கூகுள், இதன் பலனாக தற்போது அறிமுகமாகப் போகிறது RCS.

நாம் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகள் 1992 இல் தொடங்கப்பட்டவை, அதன் பின் இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் எந்த மாற்றமும் வரவில்லை அதே கேரக்டர்களைத் தான் இன்றும் நாம் பயன்படுத்திக் கொண்டுருக்கிறோம், இதன் பின் MMS சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இவை பெரிய அளவில் பயன்படுத்தப்படவில்லை. மாறாக இதன் பின் வந்த இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்கள் இந்த இடத்தைப் பிடித்து விட்டன. எடுத்துக்காட்டுக்கு வாட்ஸ்அப், மெசெஞ்சர் போன்றவை.

இன்று யாரும் தகவல்களை பறிமாற்றிக்கொள்வதற்கு SMS சேவைகளை பயன்படுத்தவில்லை, பெரும்பாலும் இவை வங்கி, ஷாப்பிங் குறித்த தகவல்களை பெறவே உதவுகிறது. எனவே, தற்போது இதற்கு மாற்றாகத்தான் RCS என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது கூகுள்.

RCS அப்படினா என்ன

RCS என்பதற்கு விரிவாக்கம் Rich Communication Service, இது ஒரு இணையம் சார்ந்த செயலியோ அல்லது மென்பொருளோ கிடையாது, இது ஒரு கம்யூனிகேஷன் புரொட்டோகால். RCS இன் சேவையை அனைத்து பயனாளர்களும் பயன்படுத்துவதற்கு இணையம் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பும் கட்டாயம்.

RCS இல் உள்ள சிறப்பு அம்சங்கள்

இதில் SMS இல் இருப்பது போன்று வெறும் எழுத்துகள் மட்டுமே இருக்காது. கூடுதலாக இதில் புகைப்படங்களை அனுப்பலாம், வீடியோக்கள் ஷேர் செய்யலாம், க்ரூப் சாட் செய்யலாம் மற்றும் இன்னும் பல வசதிகள் உள்ளன. கூடவே கூகுள் அசிஸ்டன்டையும் இதனுடன் பயன்படுத்தலாம்.

குறிப்பாக இன்ஸ்டன்ட் ரிப்ளை செய்வதற்கு இதில் AI வசதியும் உள்ளது, மேலும் நிறுவனங்கள் அனுப்பும் மெசேஜ்கள் அதன் அதிகாரப்பூர்வ (Verified) அக்கவுன்ட்டிலிருந்து தான் அனுப்பப்படுகிறதா என்பதனையும் இதன் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இதனுடன் வீடியோ கால் சேவைகளும் இணைக்கப்படுகிறது. இவை அனைத்தையும் நாம் தற்போது SMS அனுப்ப பயன்படுத்தும் Messages செயலிலேயே செய்ய முடியும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறோம், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்