அடுத்த 10 மாதங்களில் கூகுளின் நுகர்வோர் பதிப்பான கூகுள் பிளஸை மூடுவதாக அந்நிறுவனம் அதன் வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான கூகுள் பிளஸில் பயனர்களின் தனிப்பட்ட கணக்கு விவரங்கள் திருடுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் (The Wall Street Journal) நேற்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் நிறுவனம் அதன் கூகுள் பிளஸ் சேவையை மூடுவதாக அறிவித்தது.

மேலும் கூகிள் வெளியிட்ட செய்தி அறிக்கையில், போதுமான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாத காரணத்தினாலும், விரிவான சேவையை வழங்க முடியாத காரணத்தினாலும் கூகிள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதாக தெரிவித்துள்ளது.

குறிப்பு:- 2011ஆம் ஆண்டு கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் பேஸ்புக்கிற்கு போட்டியாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்