Google Tez என்பதை கூகிள், Google Pay என்று பெயர் மாற்றியுள்ளது. மேலும் இது புதிய அம்சங்களை கொண்டுள்ளது.

Google Pay வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக முன் ஒப்புதல் பெறப்பட்ட கடன்களை (Pre-approved loans) எளிதாக்குவதற்கு என தனியார் வங்கிகளுடன் கூகிள் கூட்டு முயற்சியை அறிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பரில் இந்தியாவில் முதன் முதலாக Google Tez ஆக தொடங்கப்பட்டது, தற்போது Google Pay ஆக பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இதில் HDFC Bank, ICICI Bank, Federal Bank and Kotak Mahindra Bank மூலம் வாடிக்கையாளர்கள் விரைவில் கடன் பெற முடியும்.

மேலும் இதன் நோக்கம் ஆன்லைன் வர்த்தகர்கள் மற்றும் e-காமர்ஸ் வலைத்தளங்களை இதனுடன் இணைப்பது. உதாரணமாக Redbus, BookMyShow, Goibibo, Big Bazaar போன்றவை.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்