சமூக ஊடகங்களில், ​​ஹேஷ்டாக் (Hashtag) என்ற சொல் பயனாளிகளின் கவனத்தை ஈர்க்கப் பயன்படுத்தப்படுகிறது.

‘#’ என்ற குறியீட்டைப் பயன்படுத்தி ஹேஷ்டாக் உருவாக்கலாம். ஹேஷ்டாக் மூலம் குறிப்பிட்ட ஒரு தலைப்பு சம்பந்தமான மற்ற விவரங்களை எளிதாக பார்க்க முடியும்.

ஹேஷ்டாக்குகள் முதன் முதலில் ட்விட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டன, இது ட்விட்டரில் ஒருவரை கண்டுபிடிப்பது, பின்தொடர்வது மற்றும் உரையாடலுக்கு மிகவும் உதவியது. பின்னாளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் ப்ளஸ் தொடங்கி Youtube வரையிலும் ஹேஷ்டாக்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹேஷ்டாக்குகள் பயன்படுத்தும் போது, எழுத்துக்களுக்கு நடுவில் இடைவெளி இருக்கக் கூடாது சிறப்பு எழுத்துக்களைப் (Special characters) பயன்ப்படுத்தக்கூடாது என்பது போன்ற வரைமுறைகள் உள்ளன.

ஹேஷ்டாக் எவ்வாறு பயன்படுகிறது

நீங்கள் செய்திகளை சமூக ஊடகங்களில் தேடுகிறீர்கள் என்றால், குறிப்பிட்ட ஹேஷ்டாக்குகளை கொண்டு தேடுவதன் மூலம் சிறந்த, பொருத்தமான செய்திகளை கண்டுபிடிப்பதற்கு இது உதவுகிறது.

ஹேஷ்டாக் சில உதாரணங்கள்

#worldwaterday #internationalwomensday #cryptocurrencies

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்