முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் (Instagram) புதிய வசதியை அறிமுகம் படுத்தியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் கடந்த சில மாதங்களாகவே புதுப்புது வசதிகள் அறிமுகம் படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது இன்ஸ்டாகிராமில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்லைன் வசதி அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் உங்கள் நண்பர்கள் ஆன்லைனில் இருக்கின்றார்களா என்பது குறித்து தெரிந்து கொள்ள முடியும்.

பச்சை நிற டாட் ஒருவருடைய புரொபைல் பிக்சர் அருகில் இருந்தால் அவர் ஆன்லைனில் உள்ளார் என்பதை கண்டறியலாம்.

கருத்துக்களை நேரடியாக பரிமாறி கொள்வதற்கும், புகைப்படங்களை எளிதாக ஷேர் செய்வதற்கும் இது உதவியாக இருக்கும்.

மேலும் இதன் மூலம் ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் எவ்வளவு நேரம் இருக்கின்றார் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை நீங்களும் பெற உங்கள் இன்ஸ்டாகிராம் செயலியை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்