நாம் இந்நாள் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகளுக்கும் மேலும் வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற மெசேஜிங் சேவைகளுக்கும் போட்டியாக வரவிருக்கிறது RCS.

RCS மெசேஜிங் சேவை அப்படினா என்ன மற்றும் அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து ஏற்கனவே நாம் இதற்கு முந்திய கட்டுரையில் பார்த்து விட்டோம். அதனை குறித்து தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். நாம் இந்த கட்டுரையில் RCS மெசேஜிங் சேவை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

கூடுதல் தகவல்:- RCS மெசேஜிங் சேவை அப்படினா மற்றும் அதில் உள்ள சிறப்பு அம்சங்கள்

RCS மெசேஜிங் சேவை எவ்வாறு வேலை செய்கிறது

எடுத்துக்காட்டுக்கு Hai என்ற மெசேஜினை Alice என்ற பயனாளி Bob என்பவருக்கு RCS மெசேஜ் சேவையினை பயன்படுத்தி அனுப்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதலில் இந்த மெசேஜ் ஆனது RCS Hub ற்கு அனுப்பப்பட்டு, பின்னர் RCS Hub லிருந்து செய்தி சென்றுசேர வேண்டிய Bob என்ற பயனாளியை அடையும். இதற்கு எவ்வித SMS கட்டணங்களும் கிடையாது. இதில் மெசேஜ் ஆனது இணைய உதவியுடன் டெலிவரி செய்யப்பபடுவதால் இதற்கான டேட்டா கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இப்படி இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை ஆகிய இரண்டையும் பயன்படுத்தக்கூடியது தான் RCS.

ஒருவேளை Bob பயன்படுத்தும் மொபைலில் RCS க்கான வசதி இல்லை என்றால், மேல் குறிப்பிட்டுள்ள படி மெசேஜ் ஆனது டெலிவரி ஆகாது. இதில் RCS மெசேஜ் ஆனது SMS ஆக மாறி பின்னர் Bob என்ற பயனாளியை அடையும். இதற்கு SMS கட்டணங்கள் உண்டு. இந்த இடத்தில் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும், இதில் மெசேஜை டெலிவரி செய்தது தொலைத்தொடர்பு நிறுவனம்தான். கூகுளின் பங்களிப்பு இதில் கிடையாது. எனவே தான் SMS கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

இந்த சேவையை செயல்படுத்துவதற்காக கூகுள் நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் உள்ள மொத்தம் 55 தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியாவில் ஏர்டெலும், ஜியோவும் இந்த RCS சேவையை ஒத்துழைக்கின்றன. இதைப் போன்று மொபைல் உற்பத்தி நிறுவனங்களும் இதற்காக கைகோத்துள்ளன. எடுத்துக்காட்டுக்கு சாம்சங், எல்.ஜி, லெனோவா உள்ளிட்ட மொத்தம் 11 மொபைல் உற்பத்தி நிறுவனங்கள்.

கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு RCS மெசேஜ் சேவை அமுல்படுத்தி விடலாம், ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் எவ்வாறு என்ற கேள்வி எழுந்தது, ஆனால் அதற்கும் மைக்ரோசாப்ட் ஒத்துழைப்பை அளித்துள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் மட்டும் இதற்கு இன்னும் பதில் கூறவில்லை. ஒருவேளை, ஆப்பிள் நிறுவனம் இதற்கு சம்மதம் தெரிவிக்க வில்லை என்றால், உதாரணமாக ஒரு ஆண்ட்ராய்டு பயனாளி, மற்றோரு ஆப்பிள் மொபைல் போனை பயன்படுத்தம் பயனாளிக்கு RCS மெசேஜ் அனுப்பினால் அது வெறும் SMS ஆக மட்டுமே டெலிவரி ஆகும். எனவே இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

முதல்முறையாக தற்போது RCS வசதியை பிக்ஸல் மொபைல்களில், வெரிசான் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் இணைத்து இதனை சாத்தியமாக்கி உள்ளது கூகுள் நிறுவனம். இதைப் போன்று சாம்சங் நிறுவனமும் தன்னுடைய மெசேஜிங் செயலியில் கூகுளுடைய RCS யின் வசதியை அளிக்க முன்வந்துள்ளது.

தற்போது இந்த RCS சேவையினால் மறைமுகமாக லாபம் பார்க்கப் போவதும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தான், காரணம் வாட்ஸாப்ப் போன்ற செயலிகளால் தனது SMS களுக்கான வருவாயை இழந்த நிறுவனங்களுக்கு கூகுளின் இந்த RCS சேவை ஒரு புதிய வழியினை அமைத்துள்ளது.

இதற்கு முன் மெசேஜிங் சேவை விஷயத்தில் கூகுள் தோல்வியை கண்டு இருந்தாலும், கூகுளின் இந்தமுறை அவர்களை காப்பாற்றும் என்று தொழில் நுட்ப வல்லுனர்களால் கருதப்படுகிறது.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறோம், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்