வாட்ஸாப்ப் தற்போது 200 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளை இந்தியாவில் கொண்டுள்ளது , இது இந்தியாவின் மிக சிறந்த சாட்டிங் ஆப்-ஆக கருத்தப்படுகிறது , வாட்ஸாப்ப் இந்தியாவில் Paytm மற்றும் Google Tez  App-களுக்கு போட்டியாக Payment option-ஐ அறிமுகம் படுத்தியுள்ளது.

Payment option-ஐ வாட்ஸாப்பில் எவ்வாறு enable செய்வது என்பதை பார்ப்போம்

முதலில் வாட்ஸாப்பை update செய்து கொள்ள வேண்டும்,

இது UPI (Unified Payments Interface) சார்ந்த Payment option என்பதால் உங்கள் வாட்ஸாப்ப் நம்பர், உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.

அடுத்ததாக வாட்ஸாப்ப் setting-ல் ‘add a bank account’ என்ற option-ஐ கிளிக் செய்ய வேண்டும், இது உங்கள் மொபைல் நம்பரை சரிபார்க்கும்.

அடுத்ததாக உங்கள் Bank மற்றும்  Account number-ஐ தேர்ந்து எடுக்க வேண்டும்,

கண்டிப்பாக உங்கள் Bank account, UPI அக்கௌன்ட் உடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும், அப்படி இல்லை எனில் UPI அக்கௌன்ட் ஒன்று உருவாக்கி கொள்ளவேண்டும் , இது மிகவும் எளிதானது நான்கு இலக்க எண்களை Password-ஆக கொடுக்க வேண்டி இருக்கும்.

அடுத்ததாக Debit card தகவல்களை தரவேண்டும்-இது மிகவும் பாதுகாப்பானது.

உங்கள் நண்பருக்கு (Friend-க்கு) எவ்வாறு பணம் அனுப்பலாம் என்பதை இங்கு காண்போம்

முதலில் வாட்சப்பில் உங்கள் நண்பரை (Friend-ஐ) தேர்வு செய்ய வேண்டும்.

பிறகு ‘Attachment’ option-ஐ தேர்ந்து எடுக்க வேண்டும் இதில் நீங்கள் Payment option-ஐ காணலாம்.

இதன் மூலம் நீங்கள் விரும்பும் amount-ஐ உங்கள் நண்பருக்கு அனுப்பலாம்.

இந்த வசதி ஆண்ட்ராய்டு version 2.18.41 மற்றும் ஆப்பிள் version 2.18.22-யில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்