பிற செயலிகளை போன்று, வாட்ஸாப்பும் Beta testers களை நம்பியுள்ளது, எதற்காக என்ற கேள்வி உங்களுக்கு வரும் ஏனென்றால் வாட்ஸாப்ப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது என்றால் அதற்கு முன்பாகவே இந்த Beta testers களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படும்.

இவ்வாறு வாட்சப்பின் புதிய அம்சங்கள் அறிமுகமாவதற்கு முன்பாகவே குறிப்பிட்ட Beta testers களைக் கொண்டு சோதனை செய்வதால், இத்தகைய அம்சங்கள் பயன்பாட்டிற்கு வரும் போது உலகம் முழுவதும் வாட்ஸாப்ப் பயன்படுத்தும் பில்லியன் பயனர்களின் அனுபவத்தை பாதிக்காது.

நீங்களும் வாட்ஸாப் பீட்டாவில் சேர விரும்பினால், கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும், இதற்கு முன்னர் ஒரு எச்சரிக்கை – புதிய பீட்டா அப்டேட்கள் வழக்கமான வாட்ஸாப் அப்டேட்களை விட மிகவும் அடிக்கடி வழங்கப்படுகின்றன, மேலும் முக்கியமாக எதிர்பாராதவிதமாக வாட்ஸாப்ப் செயலி crash கூட ஆகிவிடலாம்.

சரி, ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸாப்ப் பீட்டாவில் இணைவது எப்படி

இது மிகவும் எளிது, அவ்வாறு செய்ய இரண்டு வழிகள் உள்ளன, முதல் வழி பிரௌசர் (Browser) வழியாக, இரண்டாவது வழி Google Play வழியாக.

பிரௌசரைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸாப்ப் பீட்டாவில் சேர நீங்கள் பின்பற்ற வேண்டிய படிநிலைகளை இங்கே காண்போம்

 1. உங்களுக்கு விருப்பமான பிரௌசரைத் திறக்கவும் Chrome, Firefox அல்லது Opera.
 2. Google Play வலைத்தளத்தின் வாட்ஸாப்ப் பீட்டா சோதனை பக்கத்திற்கு செல்க.
 3. இதற்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக் கொள்ளவும் WhatsApp beta test page
 4. உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் நீங்கள் பயன்படுத்தும் கூகுள் கணக்கில் உள்நுழைக.
 5. அடுத்து இதில் Become A Tester என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள், நீங்கள் இப்போது ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸாப்ப் பீட்டா சோதனைத் திட்டத்தில் சேர்ந்தீர்கள்.

அடுத்து வாட்ஸாப்பின் பீட்டா செயலியை பதிவிறக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்

 1. உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் Google Play ஐ திறக்கவும், இதில் WhatsApp என்று தேடவும்.
 2. நீங்கள் செயலியின் பக்கத்தைத் திறக்கும்போது, ​​WhatsApp Messenger (Beta) என்பதை காண்பீர்கள், அதன் கீழ் You’re a beta tester for this app என்பதை காண முடியும்.
 3. அடுத்த சில மணிநேரங்களில், வாட்சப்பின் புதிய அப்டேட்டினைப் பெறுவீர்கள், இது உங்களை பீட்டா அப்டேட்டிற்கு எடுத்துச்செல்லும்.

இரண்டாவதாக Google Play ஐப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டுக்கான வாட்சப்பின் பீட்டாவில் சேர இந்த படிகளைப் பின்பற்றவும்.

 1. Google Play ஐ திறக்கவும், இதில் WhatsApp என்று தேடவும்.
 2. இப்பக்கத்தின் கீழ் பகுதியில் Become a beta tester என்பதை காண்பீர்கள், இதில் I’m in என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
 3. உறுதிப்படுத்த உங்களிடம் கேட்கும், Join என்பதை தேர்வு செய்யவும்.
 4. அடுத்த சில மணிநேரங்களில், வாட்சப்பின் புதிய அப்டேட்டினைப் பெறுவீர்கள், இது உங்களை பீட்டா அப்டேட்டிற்கு எடுத்துச்செல்லும்.

ஒருவேளை நீங்கள் வாட்சப்பின் பீட்டா பதிப்பை பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டிருந்தால்,

நீங்கள் பின்வாங்கலாம், மீண்டும் நீங்கள் பிரௌசர் வழியாக அல்லது Google Play வழியாக இதனை செய்யலாம்.

முதலில் பிரௌசரைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸாப்ப் பீட்டாவிலிருந்து வெளிவர பின்பற்ற வேண்டிய படிநிலைகளை இங்கே காண்போம்

 1. அதைப்போன்று, உங்களுக்கு விருப்பமான பிரௌசரைத் திறக்கவும் Chrome, Firefox, அல்லது Opera.
 2. Google Play வலைத்தளத்தின் வாட்ஸாப்ப் பீட்டா சோதனை பக்கத்திற்கு செல்க.
 3. உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் நீங்கள் பயன்படுத்தும் கூகுள் கணக்கில் உள்நுழைக.
 4. அடுத்து இதில் Leave the testing program என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
 5. அடுத்த பக்கத்தில் You left the test என்ற மெசேஜை காண்பீர்கள், அவ்வளவுதான்.

அடுத்து உங்கள் மொபைலில் உள்ள வாட்சப்பின் பீட்டா பயன்பாட்டை அன்-இன்ஸ்டால் செய்து, பொதுவான வாட்சப்பை நிறுவிக் கொள்ளவும்.

இதைப் போன்று Google Play ஐப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டுக்கான வாட்சப்பின் பீட்டாவிலிருந்து வெளிவர முடியும்.

 1. Google Play ஐ திறக்கவும், இதில் WhatsApp என்று தேடவும்.
 2. இப்பக்கத்தின் கீழ் பகுதியில் You’re a beta tester என்பதை காண்பீர்கள், இதில் Leave என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

மேல் குறிப்பிட்டுள்ள படி, உங்கள் மொபைலில் உள்ள வாட்சப்பின் பீட்டா பயன்பாட்டை அன்-இன்ஸ்டால் செய்து, பொதுவான வாட்சப்பை நிறுவிக் கொள்ளவும்.

அண்ட்ராய்டின் வாட்ஸாப்ப் பீட்டா செயலியை பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல்களை சந்தித்தீர்களா, உங்கள் கருத்துக்களை எங்களிடம் பகிரவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்