இந்தியாவில் ரயில் சேவையை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர், அவர்களுக்கு என புது சேவை அறிமுகப்படுத்தப்படுள்ளது.

வாட்ஸ்அப் செயலி மூலம் நீங்கள் பயணம் போகும் ரயில் எங்கே இருக்கிறது, நாம் இருக்கும் நிலையத்திற்கு இன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் என்பது போன்ற தகவல்களை பெற முடியும்.

முதலில் 7349389104 என்ற இந்த எண்ணை உங்கள் மொபைலில் Track my train என்ற பெயரில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக உங்கள் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்.

வாட்ஸ்அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் பயணம் போகும் ரயிலின் எண்ணை அனுப்பினால் அடுத்த சில நொடிகளில் உங்கள் வாட்ஸ்-அப்பிற்கு ரயில் எங்கு வந்துக்கொண்டிருக்கிறது. அடுத்தது இந்த ரயில் எந்த நிலையத்திற்கு எவ்வளவு நேரத்தில் செல்லும் போன்ற தகவல்களை அனுப்பிவிடும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்