உங்கள் PF அக்கவுண்டுக்கு பணம் சரியாக வருகிறதா, அப்படி இருந்தால் எவ்வளவு இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா, நீங்கள் வெளியே எங்கும் அலைய வேண்டியதில்லை வீட்டில் இருந்தபடியே  ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம், அதன் வழிமுறைகளை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

 

முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்கு சென்று, பி.எஃப் கணக்கு சந்தாதாரர்கள் தங்களின் விவரங்களை அளிக்க வேண்டும், இதன் மூலம் தங்கள் UAN எண்ணை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக https://www.epfindia.gov.in என்ற வெப்சைட்டை open செய்யவும்.

அடுத்ததாக Our Services>For employees என்பதை கிளிக் செய்யவேண்டும்.

அதன் பிறகு Services>Member passbook என்பதை கிளிக் செய்யவும்.

இதன் பிறகு ஒரு புதிய Page ஓபன் ஆகும், இதில் நீங்கள் உங்கள் UAN Number மற்றும் Password -ஐ குறிப்பிட வேண்டும்.

இதன் மூலம் நீங்கள் உங்கள் PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதனை அறியலாம் .

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்