இந்த தொகுப்பில் வாட்ஸாப்பை எவ்வாறு கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது என்பதை காண்போம்.

முதலில் உங்கள் வாட்ஸாப்பை மொபைல் போனில் ஓபன் செய்து கொள்ளவும்.

வலது புறம் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும். இதில் நீங்கள் WhatsApp Web என்ற option-ஐ தேர்வு செய்ய வேண்டும்.

உங்கள் மொபைல் போனில் QR Scanner ஓபன் ஆகும்.

அடுத்ததாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பிரௌசரில் https://web.whatsapp.com/ என்பதை ஓபன் செய்து கொள்ளவும்.

இதில் காட்டப்பட்டிருக்கும் QR Code-ஐ உங்கள் மொபைல் போனின் QR Scanner வழியாக ஸ்கேன் செய்து கொள்ளவும்.

இதன் மூலம் நீங்கள் வாட்ஸாப்பை உங்கள் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்