வாட்ஸாப்பில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு செய்திகளை அனுப்ப முடியும், ஒன்று வாட்ஸாப் குழுக்கள் மூலம் மற்றொன்று ஒளிபரப்பு பட்டியல்கள் (WhatApp Broadcast) மூலம்.

நாம் அனைவரும் வாட்ஸாப் குழுக்களில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து அறிந்து இருப்போம், இக்கட்டுரையில் வாட்ஸாப்பின் ஒளிபரப்பு பட்டியல்கள் (WhatApp Broadcast) குறித்து காண்போம்.

ஒளிபரப்பு பட்டியல்களில் குழு நிர்வாகி மட்டுமே செய்திகளை அனுப்ப முடியும். இதில் பெறுநர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாது.

அது சரி, வாட்ஸாப்பில் ஒளிபரப்பு பட்டியலை உருவாக்குவது எப்படி

Step 1: உங்கள் மொபைலில் வாட்ஸாப்பை திறக்கவும், மேல் வலது மூலையில் உள்ள மூன்று டாட் ஐகானைத் தட்டவும்.

Step 2: இதில் புதிய ஒளிபரப்பைத் தேர்ந்தெடுக்கவும் (New Broadcast).

Step 3: அடுத்து நீங்கள் சேர்க்க விரும்பும் நபர்களைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் ஒளிபரப்பு பட்டியல் (Broadcast List) தயார்.

புதிதாக உருவாக்கப்பட்ட பட்டியலில், பட்டியலுக்கான பெயர் இடம் பெறாது. எனவே உங்கள் Broadcast List-க்குள் சென்று Broadcast list info தேர்ந்தெடுத்து உங்களுக்கு விருப்பமான பெயரை டைப் செய்து கொள்ளவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்