நீங்கள் ஒரு தீவிரமான இன்ஸ்டாகிராம் பயனாளி என்றால், குறைந்தது ஒரு முறையாவது இன்ஸ்டாகிராமின் ஸ்டோரிகளில் ஸ்டிக்கர்களை பயன்படுத்தி இருப்பீர்கள். இன்ஸ்டாகிராம் தன்னிடத்தில் ஸ்டிக்கர்களுக்கான ஒரு நல்ல தொகுப்பினை கொண்டு உள்ளது. இதில் ஹேஷ்டாக்ஸ் (Hashtags), பரிந்துரைகள் (Mentions) மற்றும் வாக்கெடுப்புக்கள் (Polls) போன்றவை அடங்கும்.

இருப்பினும் இவ்வற்றைத் தாண்டி, சில நேரங்களில் நாம் நம்முடைய சொந்த தனிப்பட்ட ஸ்டிக்கர்களை (Personalized stickers) நமது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் சேர்க்க விரும்புவோம். துரதிருஷ்டவசமாக, இன்ஸ்டாகிராம் அதை செய்ய நேரடியான வழியினை நமக்கு வழங்க வில்லை. எனினும் வேறு வழிகளை பயன்படுத்தி இதனை செய்ய முடியும். இதற்கு நாம் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை (Third-party app) பயன்படுத்த வேண்டியிருக்கும்.

இதற்கான வழிமுறையினை நாம் இக்கட்டுரையில் பார்ப்போம்.

Step 1: முதலில் AnySticker செயலியினை டவுன்லோட் செய்துக் கொள்ளவும்.

இச்செயலியை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் AnySticker

Step 2: பின்னர் செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த பின்பு பயன்பாட்டைத் (AnySticker) திறக்கவும்.

Step 3: அடுத்து இதில் உள்ள Create Sticker என்ற பொத்தானை தட்டவும் அல்லது கீழே உள்ள பரிந்துரைக்கப்பட்ட ஸ்டிக்கர்களிலிருந்தும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.

Step 4: அடுத்த திரையில், நீங்கள் விரும்பும் டெஸ்க்டினை (Text) உள்ளிடவும். டெஸ்க்டின் நிறத்தை மாற்ற விரும்பினால், கீழே உள்ள வண்ணங்களில் தட்டி மாற்றிக் கொள்ளவும்.

Step 5: மூன்று டாட் ஐகானைத் தட்டுவதன் மூலம், ஏகப்பட்ட சின்னங்களின் (symbols) பட்டியலைப் பெற முடியும். இதில் உங்களுக்கு விரும்பமானதை பயன்படுத்திக் கொள்ளவும்.

Step 6: இறுதியாக Create Sticker என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

Step 7: இப்போது உங்கள் போனின் புகைப்பட கேலரியில் இருந்து படத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்ய இதில் உள்ள Select Image என்பதனை தட்டவும். இப்பொழுது இச்செயலி உங்கள் கேலரியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்கும், இதற்கு அனுமதி வழங்கவும்.

Step 8: இதில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான படத்தை தேர்ந்தெடுத்த பின், Add to Instagram Story என்பதை தட்டவும்.

Step 9: இப்போது உங்கள் படத்தின் மேல் நீங்கள் புதிதாக உருவாக்கிய ஸ்டிக்கர் இன்ஸ்டாகிராமின் ஸ்டோரி பகுதியில் தோன்றும். இதனை இப்பொழுது நீங்கள் இன்ஸ்டாகிராமின் ஸ்டோரியாக பதிவிடலாம். அவ்வளவுதான்.

கூடுதல் தகவல்:- சர்கார் ஸ்டிக்கர்கள் போன்று வாட்ஸப்பில் நாம் நமக்கான ஸ்டிக்கர்களை எப்படி உருவாக்குவது

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்