கடந்த சில நாட்களில் மட்டும், உங்கள் அனைவரது வாட்ஸாப்ப் சாட்டிலும் ஸ்டிக்கர்கள் இடம் பெற்றிருப்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள், இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம், இந்த ஸ்டிக்கர்கள் எவ்வாறு அனுப்பப்படுகின்றன, நாம் இந்த ஸ்டிக்கர்களை மற்றவர்களுக்கு எவ்வாறு அனுப்புவது, மேலும் இந்த ஸ்டிக்கர்கள்களை நம்மால் உருவாக்க முடியுமா என்று.

ஸ்டிக்கர்கள்களின் பயன்பாடு என்பது சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு ஒன்றும் புதிதல்ல இவை ஏற்கெனவே டெலிகிராம், ஹைக் போன்ற செயலிகளில் பயன்பாட்டில் உள்ளன, தற்போது வாட்ஸாப்பும் இந்த வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதற்கான அப்டேட் அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்கவில்லை ஆனால் வாட்ஸாப் இந்த வசதியை கொஞ்சம் கொஞ்சமாக தனது பயனாளிகளுக்கு விரிவுபடுத்தி வருகிறது. தற்போது வாட்ஸப்பில் 2.18.329 வெர்ஷன் உள்ளோர் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுக் குறித்த கட்டுரை ஏற்கனவே நம்முடைய தளத்தில் இடம் பெற்றுள்ளது, கூடுதல் தகவலுக்கு வாசிக்கவும்.

வாட்சப்பின் ஸ்டிக்கர் வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது, அதற்கான வழிமுறைகள்

சரி, தற்போது தீபாவளி வாழ்த்துகள், சர்கார் ஸ்டிக்கர்கள் போன்று நாம் நமக்கு விருப்பமான ஸ்டிக்கர்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை பார்ப்போம்.

இதற்கு இரண்டு வழிகள் உள்ளன, முதலாவது, வாட்ஸாப்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள வழிமுறை, இவ்வழிமுறையை பின்பற்ற நமக்கு கொஞ்சம் ப்ரோகிராம்மிங் அறிவு வேண்டும், இதன் மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்தில் வாட்சப்பிற்கான ஸ்டிக்கர்களை உருவாக்கி விட முடியும். இதற்கான சோர்ஸ் கோடையும் (Source Code) வாட்ஸாப்ப் நிறுவனமே வழங்குகிறது, இதனை GitHub தளத்திலிருந்து பெற்று கொள்ளலாம்.

இதெல்லாம் நமக்கு சரி வராது என்று நினைப்பவர்கள் தேர்ட் பார்ட்டி (Third party) செயலிகளை பயன்படுத்தலாம், ஆனால் இதன் மூலம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான ஸ்டிக்கர் பேக்கினை மட்டுமே நம்மால் உருவாக்க முடியும். சரி இதற்கான வழிமுறையினை பார்ப்போம்,

முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து Sticker maker for WhatsApp என்ற செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலில் நிறுவிக் கொள்ளவும்.

பின் செயலியை ஓபன் செய்து Create a new stickerpack என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதில் நீங்கள் உருவாக்கும் ஸ்டிக்கர் பேக்கிற்கு ஒரு பெயரையும் மற்றும் Author பெயரையும் கொடுக்கவும்.

தற்போது ஒரு Folder ஒன்று ஓப்பன் ஆகும். இதில் புதிய ஸ்டிக்கர்களுக்கான Empty Tray கள் இருக்கும், அடுத்து இதில் நீங்கள் Tray Icon என்பதை காண்பீர்கள், இதனை கிளிக் செய்யவும் இதுவே உங்கள் ஸ்டிக்கர் பேக்கிற்கான ஐகான், இதில் உங்களுக்கு விருப்பமான இமேஜ்-ஐ உங்கள் மொபைலின் பைல் மேனேஜரிலிருந்து தேர்ந்தெடுத்து வைக்கலாம். அடுத்து காலியாக இருக்கும் ஒவ்வொரு Tray களையும் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் உங்களுக்கு விருப்பமான இமேஜ்களை உங்கள் பைல் மேனேஜரிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.

ஒருவேளை நீங்கள் இந்த இமேஜ்களை எடிட் செய்ய விரும்பினால் அதற்கான ஆப்ஷன்களும் இதில் உள்ளன. எடிட் செய்த பிறகு Use without Cutting என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இதில் நீங்கள் குறைந்த பட்சம் மூன்று ஸ்டிக்கர்கள் முதல் அதிக பட்சம் 30 ஸ்டிக்கர்கள் வரை உருவாக்கலாம். இறுதியாக Publish Sticker Pack என்ற ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கான ஸ்டிக்கர் பேக் உருவாக்கப் பட்டது, இதனை பிற ஸ்டிக்கர்கள் போன்று உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப முடியும்.

மேலும் இக்கட்டுரை குறித்த உங்கள் சந்தேகங்களை எங்களுக்கு கமெண்ட் மூலம் தெரிவிக்கவும், கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்