தினசரி ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் அதிக அளவு பயன்படுத்தும் செயலியாக வாட்ஸாப் உள்ளது.

மற்ற சில குறுஞ்செய்தி செயலிகளான டெலிகிராம், ஹைக் போன்றவை வாட்ஸாப்பிற்கே சவால்விடும் வகையில் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே, வாட்ஸ்ஆப் நிறுவனமும் போட்டியை சமாளிக்கும் வகையில் புது வசதிகளை தனது பயனாளிகளுக்கு வழங்க முயற்சித்து வருகிறது.

அவ்வகையில் வாட்ஸாப் குரூப்களில் பகிரப்படும் எண்ணற்ற குறுஞ்செய்திகளை தடுப்பதற்கு குரூப் அட்மின்களுக்கு என புதிய அதிகாரத்தை வாட்ஸாப் அளித்துள்ளது.

இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை காண்போம்.

முதலில் நீங்கள் அட்மினாக இருக்கும் குரூப்புக்குள் செல்லுங்கள்.

இதில் Group settings என்பதை கிளிக் செய்யவும்.

அதில் Send messages என்பதை தேர்ந்தெடுக்கவும்.

பிறகு இதில் Only admins என்பதை கிளிக் செய்யவும்.

இனி அட்மின்களால் மட்டும்தான் குரூப்பில் செய்திகளை பகிர முடியும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்