நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை கண்டறியம் புதிய செயலி அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.

இந்த கருவியின் மூலம் உங்கள் உணவில் என்னென்னே சத்துக்கள் இருக்கிறது என்பதை கண்டறியலாம், இந்த கருவியின் பெயர் டெல்ஸ்பேக் ஃபுட் ஸ்கேனர் (TellSpec food scanner).

இந்த கருவியின் மூலம் நாம் சாப்பிடக்கூடிய உணவில் உள்ள ஊட்ட சத்துக்களை உடனே ஸ்கேன் செய்து நமக்கு கூறிவிடுகிறது.

இந்த ஸ்கேனரை முதலில்  உங்களுடைய மொபைலுடன் இணைத்துகொள்ள வேண்டும். பின்னர் அந்த ஸ்கேனரை நாம் உண்ணும் உணவின் அருகில் சிறிது நேரம் வைக்க வேண்டும். இந்த கருவியில் உள்ள சென்சார் உண்ணும் உணவில் எவ்வளவு கார்போஹைட்ரேட் உள்ளது, எவ்வளவு கொழுப்புசத்து உள்ளது. என்பதை கண்டறிந்து அந்த தகவலை நமது மொபைலுக்கு அனுப்பிவிடும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்