Google Play Store ஆனது மில்லியன் கணக்கான செயலிகளை கொண்டுள்ளது.

இதில் நிதி, சொத்து, உற்பத்தித்திறன், வங்கி, உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த செயலிகள் உள்ளன.

இதில் சில செயலிகள் வன்முறை, வெளிப்படையான காட்சிகள், நகைச்சுவை மற்றும் படங்கள் போன்ற காரணிகளை கொண்டுள்ளன. இது போன்ற தகவல்களை குழந்தைகள் எவ்வாறு பயன்படுத்துவது பெற்றோர் இதனை எவ்வாறு மேற்பார்வை இடுவது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

Play Store பயன்பாட்டிற்குள் சில கட்டுப்பாட்டு கருவிகளை Google உருவாக்கியுள்ளது இவை Parental control tools என்றழைக்கப்படுகின்றன இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

உங்கள் மொபைல் போனில் Play Store பயன்பாட்டைத் துவக்கவும்.

இதில் Settings என்பதை கிளிக் செய்யவும்.

Parental controls என்ற option-ஐ enable செய்து கொள்ளவும். இதில் நீங்கள் நான்கு இலக்க எண்களை password-ஆக கொடுக்க வேண்டும்.

முதலில் செயலிகள் மற்றும் விளையாட்டுகள்
உங்கள் குழந்தையின் வயதை பொறுத்து, நீங்கள் 3+ ஆண்டுகள் முதல் 18+ ஆண்டுகள் வரை தேர்வு செய்யலாம்.

இரண்டாவது பிலிம்ஸ்
வயதை பொறுத்து இங்கு தேர்வு செய்ய இயலாது, ஆனால் நீங்கள் திரைப்பட மதிப்பீடுகளைக் இங்கு காண்பீர்கள். இதனை பொறுத்து நீங்கள் தேர்வு செய்யலாம்.

இதில் U என்பதை தேர்வு செய்யுங்கள் இது எல்லா வயதினருக்கும் ஏற்றதாக இருக்கும்.

மூன்றாவதாக மியூசிக்
இதில் Restrict music marked as explicit by the content providers என்ற option-ஐ enable செய்து கொள்ளவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்