சிலர் தங்களின் தேவைகளுக்காக ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை (Two accounts on same App) பயன்படுத்துவார்கள்.

அவ்வாறு பயன்படுத்துபவர்களுக்கு ஷியோமி தனது மொபைல் போன்களில் சிறப்பு அம்சத்தை கொண்டுள்ளது, இது Dual Apps வசதி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படலாம்.

இக்கட்டுரையில், இரட்டை பயன்பாடு அம்சத்தை எவ்வாறு இயக்குவது மற்றும் பயன்படுத்துவது என்பதை காண்போம்.

Step 1: அமைப்புகள் (Settings) சென்று, Dual Apps என்பதைக் கிளிக் செய்க.

நீங்கள் இந்த பக்கத்தில், இந்த செயல்பாடு ஆதரிக்கும் செயலிகளின் முழு பட்டியலை பார்க்கலாம்.

Step 2: இதில், இரட்டை பயன்பாட்டிற்காக நீங்கள் உங்களுக்கு விருப்பமான செயலியை தேர்வு செய்யவும்.

முடிவில் நீங்கள் தேர்வு செய்த செயலின் இரண்டாவது நிகழ்வு மொபைலின் திரையில் சேர்க்கப்படும்.

அவ்வளவுதான் இச்செயல் மிகவும் எளிதானது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்