சில வருடங்களுக்கு முன்பு வரை நாம் தகவல்களை பெற அதிகமாக கூகிள் சர்ச்சை தான் பயன்படுத்தி வந்தோம், தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் யூட்டூப் என்பது அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது, இதில் ஏராளமான தகவல்கள் உள்ளன, கூகிள் சர்ச்சை பயன்படுத்தி தகவல்களை தெரிந்து கொள்வதை காட்டிலும், யூட்டூபில் வீடியோக்கள் வழியாக தகவல்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் நாம் கணினியில் வேலைகளை செய்யும் போது யூட்டூப் வீடியோக்களைக் காண்பது என்பது கடினம். அத்தகைய பல்பணி மூளை செயல்பாடுகளை தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, எடுத்துக்காட்டுக்கு நாம் டாக்குமென்டில் வேலை செய்யும் போதே யூட்டூப் வீடியோக்களை பார்ப்பது. இதற்கு என்ன தீர்வு.

கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நாம் நம்முடைய பிரௌசரில் யூட்டூப் வீடியோக்களை விரும்பும் படி நகர்த்தி பார்க்கலாம், இதனால் நம் வேலை தடைப்படாது. யூட்டூப் வீடியோக்களை பார்த்துக் கொண்டே நாம் நம்முடைய வேலைகளை செய்யலாம்.

இதனை பெற நாம் கூகுள் கிரோம் பிரௌசரின் வெர்சன் v.70 அல்லது அதற்கு மேல் உள்ள வெர்சனை பயன்படுத்த வேண்டும், இந்த முறைக்கு Picture-In-Picture mode என்று பெயர். இதற்கு மூன்றாம் தரப்பு நீட்டிப்புகள் (Third-party extensions) தேவை இல்லை. முதலில் உங்கள் பிரௌசர் புதிய ஆப்டேட்டினை கொண்டு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனை செய்ய, கிரோம் மெனுவை திறக்கவும், இதில் Help என்பதை கிளிக் செய்யவும் பின் இதில் About Google Chrome என்பதை தேர்ந்தெடுக்கவும்.

புதிய ஆப்டேட் வந்து இருந்தால், பிரௌசர் தானாகவே ஆப்டேட் ஆகி விடும். அவ்வளவுதான். அடுத்து நீங்கள் அடுத்த ஸ்டெப்பிற்கு செல்ல தயாராக உள்ளீர்கள்.

உங்கள் கூகுள் கிரோம் பிரௌசரில் யூட்டூப் தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான வீடியோவை இயக்கவும், இப்போது வீடியோவின் மீது வலது கிளிக் செய்யவும், இதில் நீங்கள் பல ஆப்ஷன்களை காண்பீர்கள், ஆனால் Picture-In-Picture mode என்ற ஆப்ஷன் இருக்காது. ஆனால் இது குறித்து நீங்கள் பயப்பட வேண்டாம்.

இருப்பினும், மீண்டும் ஒரு முறை வீடியோவின் மீது வலது கிளிக் செய்யவும், இதில் நீங்கள் முற்றிலும் வேறுபட்ட மெனுவை காண்பீர்கள். இதில் Picture-In-Picture mode என்ற ஆப்ஷன் உள்ளதை நீங்கள் பார்ப்பீர்கள். வெறுமனே அதைக் கிளிக் செய்து, திரையின் கீழ் வலது மூலையில் வீடியோ பிளே ஆவதை பார்க்க முடியும்.

மேலும் நீங்கள் உங்கள் விருப்பப்படி திரையின் அளவை மாற்ற முடியும் அல்லது எங்கும் நகர்த்தி வைக்கவும் முடியும். இது திரையின் மேல் புறமாக இருக்கும், இவ்வாறே இருக்கும் போது நீங்கள் கணினியில் மற்ற வேலைகளை செய்யலாம்.

நீங்கள் Autoplay ஆப்ஷனை என்னேபில் செய்து இருந்தால், உங்கள் வீடியோ முடிந்தவுடன் அடுத்த வீடியோ தானாக இயங்கத் தொடங்கி விடும். இதைப் போன்று தான் பிளேலிஸ்ட்களுக்கும்.

இதைப் போன்று வாட்ஸாப்பிலும் Picture-In-Picture mode அம்சம் பீட்டா டெஸ்டர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

கூடுதல் தகவல்:- வாட்ஸாப்பின் பீட்டா டெஸ்டர் ஆவது எவ்வாறு

தற்போது வாட்ஸாப்ப் சாட்டில் இருக்கும் யூட்டூப் வீடியோவின் லிங்க்கினை நீங்கள் கிளிக் செய்தால், அவை நேரடியாக YouTube செயலிகே உங்களை அழைத்துச் செல்லும். ஆனால் தற்போது வாட்ஸாப்பின் பீட்டா டெஸ்டர்களுக்கு வந்துள்ள அப்டேட்டின் படி வீடியோக்களை அப்படியே நேரடியாக வாட்ஸ்அப் சாட்டிலேயே பார்க்க முடியும்.

இச்சிறப்பு அம்சம் விரைவில் மற்ற பயனாளிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என வாட்ஸாப்ப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களில் யாரேனும் வாட்ஸாப்பின் இந்த அம்சத்தை பயன்படுத்துகிறீர்களா, எங்களுக்கு உங்களின் அனுபவத்தை கமெண்ட் மூலம் ஷேர் செய்யவும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறோம், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்