பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸாப், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது. இதுவரை iOS இயங்குதளத்தில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த ஸ்டிக்கர் வசதி தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்போது வாட்ஸாப் ஸ்டிக்கர்கள் அண்ட்ராய்டின் பீட்டா பதிப்பில் (Version 2.18.329) மட்டுமே கிடைக்கின்றன. இந்த அம்சம் வரவிருக்கும் நாட்களில் அனைத்து பயனாளிகளுக்கு கிடைக்கப்பெறும்.

நாம் சாட்டிங்-இன் போது தகவல்களை பகிர்வதை காட்டிலும் இமோஜி-களை தற்போது அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது இதன் வளர்ச்சியாக வாட்ஸாப், ஸ்டிக்கர் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது. இவை நமது உணர்வுகளை மற்றவர்களுக்கு எளிமையாக புரிய வைப்பதற்கு உதவுகின்றன.

தற்போது வாட்ஸாப் 12 ஸ்டிக்கர் பேக்குகளை வழங்குகிறது, இதற்கு மேலும் ஸ்டிக்கர்களை விரும்புவர்கள் Google Play லிருந்து ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். நம்முடைய ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஸ்டிக்கர்களை வாட்ஸாப் வெப்பிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது மூன்றாம் நபர் வடிவமைத்த ஸ்டிக்கர்களையும் பயன்படுத்த வழிவகுக்கிறது.

வாட்சப்பின் ஸ்டிக்கர் வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது, அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்

Step 1: நீங்கள் ஸ்டிக்கரைப் பகிர விரும்பும் நபர் அல்லது குழுவின் சாட்டிங் பகுதிக்குச் செல்லவும்.

Step 2: இமோஜி ஐகானைக் கண்டறிக. இது பொதுவாக கீழே உள்ள கீபோர்டின் அருகில் இருக்கும்.

Step 3: இமோஜி ஐகானைக் கிளிக் செய்க, இதில் இமோஜி, GIF மற்றும் ஸ்டிக்கர்களுக்கான ஆப்சன்கள் இருக்கும்.

Step 4: ஸ்டிக்கர்கள் மெனுவிலிருந்து, பிளஸ் பட்டனை தட்டுவதன் மூலம் பயனர்கள் ஸ்டிக்கர் பேக்கினை  பதிவிறக்கலாம்.

மேலும் இதில் வாட்ஸாப்பின் ஸ்டிக்கர் ஸ்டோருக்கு சென்று நமக்கு விருப்பமான ஸ்டிக்கர்களை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. மேலும் ஸ்டிக்கர்களை ஸ்டார் குறியீடு செய்வதன் மூலம், நாம் விரும்பும் அல்லது தேவைப்படும் நேரத்தில் ஸ்டிக்கர்களை பயன்படுத்தும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை நாம் பதிவிறக்கம் செய்த ஸ்டிக்கர் பேக்கினை நாம் விரும்பவில்லை என்றால் அதனை டெலீட் செய்துக் கொள்ளலாம்.

மேலும் இதில் பயனாளிகள் தங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர்களை API வசதியினை பயன்படுத்தி தாங்களே உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

சரி, வாட்சப்பின் ஸ்டிக்கர்களை நாம் எவ்வாறு உருவாக்குவது

வாட்ஸாப்ப் வழங்கிய ஸ்டிக்கர்களை நீங்கள் விருப்ப வில்லை என்றால், நீங்களே ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்காக வாட்ஸாப் விரிவான வழிகாட்டியினை வழங்கியுள்ளது. எனவே நீங்கள் அதை இங்கே படிக்கலாம்.

Creating stickers for WhatsApp

இதற்கு Adobe Photoshop மற்றும் அடிப்படை இமேஜ் எடிட்டிங் அனுபவம் தேவைப்படும்.

ஸ்டிக்கர்கள் சரியாக 512×512 பிக்சல் அளவினை கொண்டிருக்க வேண்டும் மேலும் ஸ்டிக்கர்கள் 100kb க்கும் குறைவான பைல் சைஸினை உடையதாக இருக்க வேண்டும்.

மேலும் இக்கட்டுரைக் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு பரிந்துரைக்கவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்