இன்றைய இன்டர்நெட் சகாப்தத்தில், சரியான தலைப்பினைக் கொண்ட ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கும் மேலானது.

எடுத்துக்காட்டுக்கு, இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தப்படும் தலைப்புகள் (captions) ஒரு புகைப்படத்தின் காட்சி கூறுகளை நன்கு வெளிப்படுத்தும். ஒவ்வொருவரும் மிக சிறிய மற்றும் கவர்ந்து இழுக்கக்கூடிய தலைப்பினை வாசிக்க விரும்புகிறார்கள்.ஆனால் ஒவ்வொரு நாளும் இவ்வாறான தலைப்புகளை கொண்டுவருவது உண்மையிலேயே மிகவும் கடினம்.

இதற்காக மூன்றாம் தரப்பு இன்ஸ்டாகிராம் செயலிகள் ஏராளம் உள்ளன, அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

1. Captions Plus

இது ஒரு எளிய பயன்பாடாகும், இதில் நூற்றுக்கணக்கான தலைப்புகள் (captions) மற்றும் நிகழ்வுகளுக்கான மேற்கோள்கள் (Quotes) உள்ளன. மேலும் இதில் தலைப்புகளை எளிதாக கண்டறிய அவை அழகாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

2. Captions for Instagram and Facebook Photos

இது மேலே குறிப்பிட்ட செயலியை போலன்றி, இதில் ஒவ்வொரு தலைப்புகளின் கீழே தொடர்புடைய குறிச்சொற்கள் (Tags) உள்ளன. இதன் மூலம் நீங்கள் தேடும் தலைப்புகளில் பல்வேறு தகவல்களை பெற முடியும்.

3. Captions for Instagram

இதில் பல்வேறு பிரிவுகளில் எளிமையாக தலைப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, இதன் மூலம் நிகழ்வுகளுக்கான மேற்கோள்களை (Quotes) எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

இவ்வாறு ஒரு நகைச்சுவையான தலைப்பை பயன்படுத்துவதால், மந்தமான படத்தையும் மேம்படுத்தி சரியான சமநிலையை கொடுக்க முடியும்.

மேலும் இக்கட்டுரைக் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு பரிந்துரைக்கவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்