இன்ஸ்டாகிராமின் ஸ்டோரிகளில் ஸ்டிக்கர்களின் பயன்பாடு முக்கிய அங்கம் வகிக்கிறது, நிச்சயமாக, பில்டர்ஸ்களும் (Filters) உதவுகின்றன. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் லொகேஷன் மற்றும் ஹேஸ்டேக் போன்ற ஸ்டிக்கர்கள் கிளிக் செய்யப்படுவது மட்டுமல்லாமல், வாக்கெடுப்பு (Poll) மற்றும் ஈமோஜி ஸ்லைடர் ஸ்டிக்கர்களும் (Emoji slider Sticker) அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு சில நாட்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் கேள்வி ஸ்டிக்கரை (Question Sticker) அதன் அற்புதமான ஸ்டிக்கர்ஸ் தொகுப்பில் சேர்த்தது. இப்போது அவர்கள் மற்றொரு ஸ்டிக்கரை அதன் ஸ்டிக்கர்ஸ் தொகுப்பில் சேர்த்துள்ளனர் அது தான் கவுண்டவுன் ஸ்டிக்கர் (Countdown Sticker).

நீங்கள் இந்த தொகுப்பில், இந்த ஸ்டிக்கரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை குறித்து தெரிந்து கொள்ள போகிறீர்கள். தொடங்குவோம்,

கவுண்டவுன் ஸ்டிக்கர் அப்படினா என்ன

உங்கள் வீட்டில் அல்லது கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது, அதனை இன்ஸ்டாகிராம் வழியாக முன்னதாக அறிவிக்க இந்த கவுண்டவுன் ஸ்டிக்கரை பயன்படுத்திக் கொள்ளாலாம். மேலும் இதில் நிகழ்ச்சி நடைபெறும் தேதி, நேரம், இடம் ஆகியவற்றை எளிதாக பதிவு செய்ய முடியும்.

இது ஒரு அலாரம் கிளாக் (Alarm clock) போன்றது, இது உங்களின் அடுத்த நிகழ்வு (Next event), நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் போன்றவற்றை, உங்களை பின்பற்றும் பார்வையாளர்களும் ஞாபகப்படுத்தும்.

கவுண்டவுன் ஸ்டிக்கரை எவ்வாறு பயன்படுத்துவது

இன்ஸ்டாகிராம் ஸ்டிக்கர்கள் பயன்படுத்த மிகவும் எளிதானது. பிற ஸ்டிக்கர்களைப் போலவே, நீங்கள் பதிவிடும் ஸ்டாரினியின் போது ஸ்டிக்கர் தொகுப்பினை திறந்து, நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விஷயத்தில், கவுண்டவுன் ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் கவுண்டவுன் ஸ்டிக்கரைச் சேர்க்கும்போது, நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் ஒரு பெயரினைக் கொடுக்க வேண்டும். நீங்கள் அதை வெறுமையாக விட முடியாது.

அடுத்து, நீங்கள் இந்த கவுண்டவுனில் மிக முக்கியமான விஷயத்தை சேர்க்க போகிறீர்கள், அது தான் கவுண்டவுனின் இறுதி தேதி (The end date). அதற்கு, கவுண்டவுன் ஸ்டிக்கரில் உள்ள இலக்கங்களை தட்டி, கீழே உள்ள காலெண்டரில் முடிவு தேதியை தேர்வு செய்யவும். இறுதியாக, மேலே உள்ள Done என்ற பொத்தானைத் தட்டவும்.

ஒருவேளை புதிதாக சேர்க்கப்பட்ட ஸ்டிக்கரின் நிறம் பிடிக்கவில்லையா? நீங்கள் அதை மாற்றலாம். அவ்வாறு செய்ய, மேலே உள்ள வண்ணத் தட்டு (Color palette) ஐகானில் தட்டவும். அவ்வளவுதான்.

குறிப்பு:- நீங்கள் ஒரு ஸ்டோரிக்கு ஒரே ஒரு கவுண்டவுன் ஸ்டிக்கரை தான் சேர்க்க முடியும், ஒருவேளை ​​நீங்கள் பல கவுண்டவுன்ஸை உருவாக்க விரும்பினால் அதை வேறு ஸ்டோரிகளில் பயன்படுத்தலாம். மேலும் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் இயங்கும்.

நீங்கள் உருவாக்கிய கவுண்டவுனை டெலீட் செய்ய, மறுபடியும் நீங்கள் இன்ஸ்டாகிராமின் ஸ்டோரி பக்கத்திற்கு சென்று கவுண்டவுன் ஸ்டிக்கரை கிளிக் செய்து, நீங்கள் நீக்க விரும்பும் கவுண்டவுனில் உள்ள மூன்று டாட் ஐகானைத் தட்டவும். பின் பாப்-அப் மெனுவில் தோன்றும் Remove என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஒரு பார்வையாளராக, கவுண்டவுன் ஸ்டிக்கருக்கான நினைவூட்டல் (Reminder) உங்களுக்கு தேவைப்பட்டால், அதற்கும் வழி வகை செய்கிறது இன்ஸ்டாகிராம்.

கவுண்டவுன் ஸ்டிக்கருக்கான நினைவூட்டலை (Reminder) அமைக்க, ஸ்டோரியின் மீது உள்ள கவுண்டவுன் ஸ்டிக்கரை தட்டவும். நீங்கள் கீழே இரண்டு விருப்பங்களை பெறுவீர்கள். அவை Remind me மற்றும் Share Countdown. இதில் Remind me என்பதை கிளிக் செய்து நினைவூட்டலை (Reminder) அமைத்து கொள்ளவும். மேலும் நீங்கள் இந்த ஸ்டிக்கரை ஷேர் செய்ய விரும்பினால் Share Countdown என்பதை கிளிக் செய்யவும்.

கவுண்டவுன் ஸ்டிக்கர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது. இது இன்ஸ்டாகிராமின் பர்சனல் ப்ரோபைல் மற்றும் பிசினஸ் ப்ரோபைலிலும் வேலை செய்கிறது. ஒருவேளை உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் கவுண்டவுன் ஸ்டிக்கர் இல்லாவிட்டால், நீங்கள் உங்களின் இன்ஸ்டாகிராம் செயலியை அப்டேட் செய்து கொள்ளவும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்