ஒரு சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டகிராம், இன்ஸ்டகிராமில் ஒருவர் மாற்றொருவரை எளிதாக கண்டுபிடிக்க Nametags எனும் சோதனையை தொடங்கியது. இப்போது, ​​இன்ஸ்டகிராம் இறுதியாக அனைத்து பயனாளிகளுக்கும் இப்புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Nametags அடிப்படையில் QR குறியீடு போன்ற வேலையை செய்கிறது இதன் மூலம் ஒருவரின் கணக்கை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இது ஏற்கனவே Snapchat இல் உள்ள Snapcodes என்ற அம்சத்தைப் போன்றது.

இதில் நீங்கள் வெவ்வேறு வண்ணங்கள், ஈமோஜிக்கள் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

நீங்கள் இன்ஸ்டகிராமில் உங்கள் சொந்த Nametag ஐ உருவாக்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும்

முதலில் நீங்கள் உங்கள் சுயவிவர (Profile) பக்கத்திற்குச் சென்று, ஸ்வைப் செய்யலாம் அல்லது வலதுபுறம் உள்ள மெனு பொத்தானைத் தட்டலாம், இதில் Nametag என்பதை தேர்ந்தேடுக்க.

இது உங்கள் இயல்புநிலை Nametag ஐ காண்பிக்கும், ஆனால் இதனை நீங்கள் உங்கள் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம்.

கூடுதலாக, உங்களுக்கு விருப்பமான சமூக வலைத்தளத்தில் உங்கள் நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்து கொள்ளும் விருப்பமும் இதில் உள்ளது.

மேலும் ஒருவரின் Nametag ஐ ஸ்கேன் செய்ய, நீங்கள் வலதுபுறமாக ஸ்வைப் செய்து கேமராவை ஓபன் செய்யவும்.

Nametag அம்சம் தற்போது இன்ஸ்டாகிராமின் அண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்