இன்ஸ்டாகிராம் அவ்வப்போது சில புதிய வசதிகளை அதன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டுதான் உள்ளது, அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம், வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் போன்ற செயலிகளில் உள்ளதைப் போன்று டெக்ஸ்ட் மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜ்களையும் எளிமையாக பகிர்ந்து கொள்ளும் வசதியினை அறிமுகப்படுத்தி உள்ளது.

மொபைல் போன்களின் அங்கமாக உள்ள வாட்ஸாப்ப் செயலியில், பயனர்கள் தங்கள் செய்திகளை அல்லது தகவல்களை டெக்ஸ்ட், ஆடியோ அல்லது வீடியோ வடிவில் பரிமாறி கொள்ளும் வசதி ஏற்கனவே உள்ளது. இதன் காரணமாக பயனர்களிடன் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது வாட்ஸாப்ப், இதனை தொடர்ந்து வந்த மற்ற சாட்டிங் செயலிகளிலும் இத்தகைய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, எனினும் இத்தகைய வரவேற்பினை அவை பெறவில்லை.

இதைப் போன்ற வசதியினை இன்ஸ்டாகிராம் பயனாளிகள் எதிர் பார்த்து காத்திருந்தனர், அவர்களின் விருப்பத்திற்கு இணங்க, தற்போது இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே இருந்த டைரக்ட்(Direct) என்ற அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் இனி பயனர்கள் குரல் செய்திகளை அனுப்பலாம். குறிப்பாக இன்ஸ்டாகிராமின் இந்த வாய்ஸ் மேசேஜ் அம்சம் வாக்கி டாக்கி போன்று செயல்படுகிறது.

இன்ஸ்டாகிராமின் டைரக்ட் வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்

முதலில் இன்ஸ்டாகிராமின் Instagram Direct பக்கத்திற்கு சென்று, நீங்கள் செய்தியை பகிர விரும்பும் உங்களுக்கு விருப்பமான நபரை தேர்ந்தேடுக்கவும்.

அடுத்து மெசேஜ் பாரில் காணப்படும் மைக்ரோபோன் ஐகானை அழுத்திப்பிடித்துக் கொண்டு நீங்கள் பேச வேண்டியதை பதிவு செய்ய வேண்டும், பேசி முடித்ததும் மைக்ரோபோன் ஐகானை விடுவிக்க வேண்டும். அவ்வளவு தான்.

ஒருவேளை நீங்கள் தவறுதலாக பதிவு செய்து விட்டால் மெசேஜை திரையின் இடதுபுறமாக ஸ்வைப் செய்வதன் மூலம் அதனை கேன்சல் செய்து விடலாம்.

நாம் பதிவு செய்யும் இந்த வாய்ஸ் மெசேஜ்கள் திரையில் Wav கோப்பாக காண்பிக்கப்படும், மேலும் மறு முனையில் உள்ள நண்பர் நம்முடைய வாய்ஸ் மெசேஜினை கேட்ட பிறகு இந்த வாய்ஸ் மெசேஜ்கள் தானாக நீக்கப்பட்டு விடும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் இயங்கு தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பயனாளிகள் இன்ஸ்டாகிராமை அப்டேட் செய்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

கூடுதல் தகவல்:- இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸை ரகசியமாக ஷேர் செய்வது எப்படி

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்