1. YouTube ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது, இந்த எண்ணிக்கை இணையத்தில் உள்ள அனைத்து மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு.
2. பேபால்-ன் (PayPal) முன்னாள் மூன்று ஊழியர்களால் YouTube Feb 2005-இல் நிறுவப்பட்டது.
3. முதல் YouTube வீடியோ ஏப்ரல் 23, 2005 அன்று “Me at the zoo” என்ற பெயரில் பதிவேற்றப்பட்டது.
4. YouTube நிறுவனத்தை 1.65 பில்லியன் யூரோவிற்கு Google 2006-இல் வாங்கியது.
5. Google க்குப் பிறகு இரண்டாவது மிகப் பெரிய தேடு பொறி (search engine) Youtube ஆகும்.
6. ஒவ்வொரு நிமிடமும், 100 மணிநேரத்தை உள்ளடிக்கிய வீடியோக்கள் YouTube இல் பதிவேற்றப்படுகிறது.
7. YouTube-ல் அதிக முறை பார்க்கப்பட வீடியோ “Gangnam Style” இது மூன்று பில்லியன் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
8. YouTube இல் மிகவும் Dislike செய்யப்பட்ட வீடியோ Justin Bieber இன் “Baby” இது ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான Dislike-ஐ பெற்று உள்ளது.
9. எந்தவொரு ஆன்லைன் வீடியோ தளத்தையும் விட அதிகமான HD வீடியோக்களை YouTube கொண்டு உள்ளது.
10. YouTube இல் உள்ள அனைத்து வீடியோக்களையும் ஒருவர் பார்க்க 1,700 ஆண்டுகள் ஆகும்.