பல எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பலரும் எதிர்பார்த்திருந்த ஜியோ ஜிகாஃபைபர் பிரான்ட்பேன்ட் திட்டத்தை ரிலையன்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவில் உள்ள வீடுகளுக்கு அதிவேகமான இன்டர்நெட் சேவையை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

MyJio ஆப் அல்லது jio.com இணையதளத்தில் இந்த ஜியோ ஜிகாஃபைபருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த முன்பதிவு வரும் ஆகஸ்டு 15-ஆம் தேதியிலிருந்து தொடங்கபட உள்ளது.

மேலும் ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ் அறிவிப்பை ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி ஆகியோர் வெளியிட்டனர். ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ் சேவையை பயன்படுத்தி வி.ஆர் ஹெட்செட்ஸ் மூலம், 360 டிகிரி படத்தை 4K ரெஸல்யூஷனில் பார்க்க முடியும் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதன் மூலம் சர்வதேச அளவில் பிராட்பேன்ட் சேவையில் இந்தியாவை முதல் 5 இடங்களுக்குள் கொண்டுவர ரிலையன்ஸ் உறுதிச்செய்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்