ஜியோ நிறுவனம் தனது இரண்டாம் ஆண்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது.

இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை தன் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுவதற்கு ஜியோ நிறுவனம் பல சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.

அதன் அடிப்படையில் தனது வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2GB டேட்டாவை கூடுதலாக வழங்க உள்ளது ஜியோ நிறுவனம். மொத்தமாக 10GB கூடுதல் டேட்டா இலவசம்.

இத்திட்டம் செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை. இது குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் My Jio ஆப் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் ஜியோ வாடிக்கையாளர்கள் 240 கோடி GB 4G இன்டெர்நெட் சேவையைப் பயன்படுத்துகிறார்களாம். மொத்தத்தில் இந்தியாவில் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 25 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்