செப்டம்பர் 2016 இல் ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது, இந்திய சந்தைக்குள் அறிமுகம் ஆனா சிறு நாட்களிலேயே ஜியோ நிறுவனம் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கும் போட்டி கொடுக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை தன் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுவதற்கு ஜியோ நிறுவனம் பல சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.

புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை குஷிபடுத்தும் விதமாகவும் 4G யில் 1GB டேட்டாவை இலவசமாக வழங்கும் அறிவிப்பை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஜியோவின் இந்த சலுகையை பெற டைரி மில்க் சாக்லேடின் காகிதம் இருந்தாலே போதும்.

சரி, ஜியோவின் இந்த சலுகையை எவ்வாறு பெறுவது

முதலில் ரூபாய் 10 முதல் தொடங்கும் டைரி மில்க் சாக்லேடில் ஏதாவது ஒன்றை வாங்கி கொள்ளவும்.

அடுத்ததாக உங்கள் மொபைல் போனில் உள்ள மை ஜியோ ஆப்பை ஒப்பன் செய்து கொள்ளவும்.

பிறகு அதில் உள்ள Click a photo of an empty Cadbury Dairy Milk wrapper என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

அப்போது உங்கள் கேமராவை திறக்க செயலி அனுமதி கேட்கும், இதன் மூலம் டைரி மில்க் சாக்லேட்டின் ரேப்பரை போட்டோ எடுத்து அப்லோடு செய்ய வேண்டும்.

இதன் மூலம் நீங்கள் 1GB டேட்டா பெற்றத்திற்கான அறிவிப்பு உடனே உங்கள் ஸ்கிரீனில் தெரிவிக்கப்படும்.

இந்த சலுகையின் மூலம் ஒரு ஜியோ எண்ணிற்கு ஒரு முறை மட்டுமே இலவச டேட்டாவை பெற முடியும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்