ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான பொது கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஜியோ ஃபோனில் சில மாற்றங்கள் செய்து புதுப்பிக்கப்பட்ட பல வசதிகளுடன் ஜியோ போன் 2 என்ற பெயரில் ஜியோவின் அடுத்த படைப்பு அறிமுகப் படுத்தப்பட்டது.

வாட்ஸ் அப், யூ ட்யூப் போன்ற செயலிகளை இந்த ஜியோ போன் 2 வில் பயன்படுத்த முடியும்.

ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி முதல் இந்த ஜியோ போன் 2 விற்பனைக்கு வர உள்ளது. இதன் அறிமுக விலை 2,999 ரூபாய் மட்டுமே.

ஜியோ போன் 2 வின் சிறப்புஅம்சங்கள்

நானோ டூயல் சிம் கொண்டது.

டிஸ்பிலே: 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

ஓ.எஸ்: KAI ஓ.எஸ் பயன்பாட்டில் இது செயல்படுகிறது.

மெமரி: 512 எம்.பி RAM, 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இதில் உள்ளது.

128 ஜிபி எக்ஸ்பாண்டபிள் மெமரி கார்டு ஸ்லாட்டும் உள்ளது.

கேமரா:  2 மெகா-பிக்ஸல் பின் கேமராவுடனும், விஜிஏ ஃப்ரெண்ட் கேமராவும் உள்ளது.

பேட்டரி: 2000mAh.

குவார்டி கீ பேடு, நான்கு வழி நாவிகேஷன் கீ தவிர வாய்ஸ் கமாண்டிற்கான பட்டன் ஆகியவையும் உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்