பேஸ்புக், தனது புதிய அப்டேட் குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இப்புதிய அப்டேட்டுக்கு `லிப் சின்க் லைவ்’ என்று பெயரிட்டுள்ளது. இதன் மூலம், பேஸ்புக் லைவ் நாம் போடும் போது, பின்னணியில் நம் விருப்பத்துக்குத் தேவையான பாடலை நமது play-லிஸ்ட்டில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர், அந்தப் பாட்டின் வரிகளுக்கு ஏற்ப வாயசைத்து அசத்தலாம்.

இப்புதிய வசதியை, குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் தற்போதைக்கு வெளியே விட்டு சோதனை நடத்த உள்ளதாம் பேஸ்புக் நிறுவனம். இதனை அடுத்து, சீக்கிரமே அனைவரும் பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்யப்பட உள்ளதாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்