ஐந்து கேமராக்களை கொண்ட எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான LG V40 THINQ மாடல் கடந்த வாரம் வெளியிட்டது.

எல்ஜி வி40 தின்க்யூ ஐந்து கேமராக்களை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட் போனாகும், இது முன்பக்கம் இரண்டு கேமராவையும், பின்பக்கம் மூன்று கேமராவையும் கொண்டுள்ளது.

LG V40 THINQ வின் மற்ற சில சிறப்பம்சம்சங்கள்

  • நாட்ச் டிஸ்பிளே
  • பின்புற கைரேகை சென்சார்
  • முகத்தை அடையாளம் காணும் திறன்
  • 3D சரவுண்ட் சவுண்ட்
  • Boombox ஸ்பீக்கர்
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • யூஎஸ்பி – சி டைப் சார்ஜிங்

USB Type-C பற்றிய தகவலுக்கு

எல்ஜி வி40 தின்க்யூ 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது. மேலும் இதில் 2 டிபி வரை மைக்ரோ மெமரி கார்டை பயன்படுத்தி நினைவகத்தை விரிவாக்கம் செய்து கொள்ள முடியும். இது ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ மாடலுடன் வருகிறது.

டிஸ்பிலே 6.4 இன்ச் மற்றும் இதில் பிராசஸர் ஸ்னாப்டிராகன் 845 SoC இடம் பெற்றுள்ளது.

மேலும் இது 3,300 எம்ஏஹச் பேட்டரி வசதியினை கொண்டது. இதன் விலை ரூ. 66,400 லிருந்து தொடங்குகிறது. இந்த போன் வரும் அக்டோபர் 18 முதல் விற்பனைக்கு வருகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்