Liquid crystal display (LCD) என்பது படங்கள் மற்றும் அசையும் படங்கள் போன்ற தகவல்களை எலக்ட்ரானிக் முறையில் காட்சிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மெல்லிய தட்டையான பேனலாகும்.

இவை கணிப்பொறிகளின் கணினித்திரைகள், தொலைக்காட்சிகள், கைக்கடிகாரங்கள், கால்குலேட்டர்கள் மற்றும் தொலைபேசிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இது திரவ படிகங்களால் நிரப்பப்பட்டு, பிம்பங்களை உருவாக்குவதற்காக மின்னணு முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் ஒளியியல் சாதனம் ஆகும்.

ஒரு LCD இன் ஒவ்வொரு பிக்சலும் இரண்டு ஒளி ஊடுருவக்கூடிய மின்முனைகள் மற்றும் இரண்டு தளவிளைவுண்டாக்கும் வடிப்பான்கள் ஆகியவற்றுக்கிடையே அமைக்கப்பட்ட மூலக்கூறுகளின் அடுக்கைக் கொண்டிருக்கும்.

2008 ஆம் ஆண்டு, உலகளாவிய LCD திரைகளுடன் கூடிய தொலைக்காட்சிகளின் விற்பனை CRT யின் விற்பனை எண்ணிக்கையை விட மிஞ்சியிருந்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்