கூகுள் நிறுவனம் நாம் அறிந்த ஒன்றே, இதன் தயாரிப்புகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். எடுத்துக்காட்டுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் முதல் மின்னஞ்சல் முகவரி வரை, கூகுளின் சில தயாரிப்புகள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன சில தயாரிப்புகள் அதன் சேவையை பாதியிலேயே நிறுத்தி உள்ளன, காரணம் அதற்கு பயனாளிகளிடம் போதிய வரவேற்பு இல்லாமல் போனதே.

அவ்வாறு தனது சேவையை பாதியிலேயே நிறுத்திய சில கூகுளின் தயாரிப்புகளை இக்கட்டுரையில் காண்போம்.

1. Google Answers

முதலாவது நாம் பார்க்க இருப்பது Google Answers, இது கூகுள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. Google Answers பயனாளிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது, ஆனால் இதன் சேவை நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்தது 2006 ஆம் ஆண்டு இதன் சேவை நிறுத்தப்பட்டது.

2. Google Lively

பயனர்கள் தங்கள் நண்பர்களுடன் தொடர்பு கொள்ள மற்றும் புதிய வழிகளில் தங்களை ஆன்லைனில் வெளிப்படுத்த இச்சேவையினை பயன்படுத்தினர், ஆனால் பயனாளிகளிடம் சரியான புரிதல் இல்லாத காரணத்தினாலும் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடையாத காரணத்தினாலும் இதன் சேவை 2008 நிறுத்தப்பட்டது.

3. Google Glass

பேஷன் உலகிற்கு என 2012 ஆம் ஆண்டு Google Glass அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அதிக விலை, சாப்ட்வேர் கோளாறு மற்றும் பிரைவசி பிரச்சனை ஆகிய காரணங்களால் வெளியான மூன்றே ஆண்டுகளில் இதன் சேவை நிறுத்தப்பட்டது.

4. Google Reader

செய்திகள் மற்றும் ப்ளாக்குகளை வாசிப்பதற்காக இச்சேவை ஆரம்பிக்கப்பட்டது, மேலும் இது செய்தி தளங்களில் இருந்து செய்திகளைப் பயனாளர்கள் பதிவிறக்கவும் அனுமதித்தது. ஆனால் 2013 ஆம் ஆண்டு இதன் சேவை நிறுத்தப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது.

5. Google Buzz

இது பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளமாகும், இதனை ஜிமெயில் கணக்குடன் இணைத்து பயன்படுத்தலாம், பிரைவசி பிரச்சனை எழுந்த காரணத்தினால் இதன் சேவை 2011 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது, இதற்கு மாற்றாக தான் Google+ அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

6. Google Wave

Google Wave சேவையை பயன்படுத்தி பயனாளிகள் தங்களுக்குள் மெசேஜ் செய்து கொள்ள முடியும், மேலும் இரண்டு பேர் இணைந்து டாக்குமெண்ட்களை எடிட் செய்து கொள்ளவும் முடியும். ஆனால் இதனை பயன்படுத்த பயனாளிகளுக்கிடையே இருந்த குழப்பத்தால் இதன் சேவை 2010 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

7. Google Video

Google Video கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையாகும், ஆனால் இச்சேவை 2006 இல் கூகுள் YouTube ஐ வாங்குவதற்கு முன்பு தொடங்கப்பட்டது. பின் கூகுள் வீடியோ 2009 இல் புதிய பதிவேற்றங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டது. அதன் பின் YouTube அறிமுகமான பின்னர் கூகுளின் வீடியோ சேவை தனாகவே முடக்கப்பட்டது.

8. Google Catalogs

Google Catalogs ஒருங்கிணைக்கப்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை நமக்கு தருகிறது, பெரும்பாலான மக்கள் இதனை விரும்பாத காரணத்தால் இதன் சேவை 2015 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

9. Orkut

தொடக்க காலத்தில் Orkut பிரபலமான சமூக வலைத்தள சேவையாக இருந்தது. இந்த தளம் அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களுக்காக இத்தளம் 2014 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

10. Google URL Shortener

Google URL Shortener என்பது Goo.gl என்று அறியப்பட்டது, இது கூகுள் வழங்கும் ஒரு URL குறுக்கல் சேவை. இச்சேவை டிசம்பர் 2009 இல் தொடங்கப்பட்டது, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த சேவை புதிய பயனர்களை ஏற்றுக் கொள்ளவில்லை, மேலும் 2019 ஆம் ஆண்டு மார்ச் 30 க்குள் தற்போது இருக்கும் பயனர்களுக்கான சேவையையும் நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு எல்லாம் மேலாக கடந்த அக்டோபர் மாதத்தில், பயனர்களின் தனிப்பட்ட கணக்கு விவரங்களை கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் திருடுவதாக புகார் எழுந்தது இதன் அடிப்படையில், கூகுள் நிறுவனம் அதன் கூகுள் பிளஸ் சேவையை மூடுவதாக அறிவித்தது.

கூடுதல் தகவல்:- கூகுள் பிளஸின் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

இக்கட்டுரையில் நாங்கள் கூகுளின் 10 சேவைகளை குறிப்பிட்டுள்ளோம், மேலும் இதில் வேறு எதாவது உங்களுக்கு தெரிந்த கூகுளால் நிறுத்தப்பட்ட அதன் சேவைகள் இருந்தால் கமெண்ட் மூலம் எங்களுக்கு தெரிவிக்கவும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறோம், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

2 thoughts on “தனது சிறந்த 10 சேவைகளை நிறுத்திய கூகுள் நிறுவனம்”

    1. கூகுள் பிளஸ் குறித்து கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது, நன்றி

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்