நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது, அதெற்கேற்றார் போல் இந்த டிஜிட்டல் உலகில் மால்வேர்களின் எண்ணிக்கை நம்மை பாடாய் படுத்துகின்றன. சரி மால்வேர்கள் என்றால் என்ன, இதனால் நமக்கு என்ன நடக்க போகிறது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

மால்வேர்கள் என்பவை தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்படுபவை, நாம் இவற்றை தடுக்க நினைத்தாலும், இவை வேறொரு வழியில் நமக்கு தீங்கு விளைவிக்கின்றன. சரி, மால்வேர்கள் இன்று இவ்வளவு பெரிய பேச்சு பொருளாவதற்கு என்ன காரணம்.

இவை அங்கு தொட்டு இங்கு தொட்டு கடைசியாக இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் வந்து விட்டன. இந்த மால்வேர்கள் நாம் நமது மொபைலில் இன்ஸ்டால் செய்யும் செயலிகள் மூலமாகவே உள்ளே வருகின்றன என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிர்ச்சிக்கரமான உண்மை என்ன வென்றால் பெரும்பாலான மால்வேர்கள் நாம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யும் கேம்கள் மூலமாகவே உள்ளே நுழைகின்றன என்பதனை ESET நிறுவனத்தில் பணிபுரியும் சைபர் செக்யூரிட்டி வல்லுனரான Lukas Stefanko என்பவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதில் இவர் 13 ரேஸிங் வகை கேம்களில் மால்வேர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கேம்கள் அனைத்தும் Luiz O Pinto என்ற டெவலப்பரின் பெயரில் உருவாக்கப்பட்டுப் பட்டுள்ளன.

சரி, மால்வேர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன

நாம் எப்போதும் போல கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கேம்களை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருப்போம், மொபைலில் இன்ஸ்டால் செய்த பின்னர் அவற்றின் ஐகானை கிளிக் செய்யும் போது கேம் கிராஷாகி வீட்டதாக நமக்கு செய்தி வரும், மேலும் மொபைலின் டிஸ்ப்ளேவிலிருந்தும் அந்த கேமின் ஐகான் மறைந்து இருக்கும், நாம் அந்த நேரத்தில் இதனை பெரியதா எடுத்துக் கொள்ள மாட்டோம், இப்போது தான் பிரச்னை ஆரம்பம் ஆகாப் போகிறது.

டிஸ்ப்ளேவிலிருந்து மறைந்த கேமின் ஐகான் மொபைலின் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும், இதன் பின் அது தனக்கு தேவையான apk வகை பைல்களை வேறு எதாவது புதிய டொமைன் மூலமாக டவுன்லோடு செய்து நம்முடைய மொபைலில் நிறுவிக் கொள்ளும், இதன் மூலமாக தான் மால்வேர்கள் நம்முடைய மொபைலில் நுழைகின்றன. இவை நமக்கு தெரியாமல் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை திருட ஆரம்பிக்கின்றன மேலும் இவை நம்முடைய மொபைல் செயல்பாடுகளை கண்காணிக்கின்றன.

 

Lukas Stefanko என்பவர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ள இந்த 13 கேம்களையும் இதுவரை இந்து லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியுள்ளனர். மேலும் தற்போது இதுக் குறித்த அறிக்கை கூகுள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் இந்த 13 கேம்களும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப் பட்டுள்ளன.

ஒருவேளை இதில் ஏதாவது ஒரு கேமை நீங்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகின்றீர்கள் என்றால் உடனை அன்இன்ஸ்டால் செய்து விடுங்கள்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்