உலகக் கோடீஸ்வர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் 3-ம் இடத்தில் இருந்த வாரன் பபெட்டினை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வாரன் பப்பெட் ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆக இருந்து வந்த நிலையில் 2006-ம் ஆண்டு அவரது பங்குகளைத் தொண்டு நிறுவனங்களுக்கு எழுதி வைத்ததால் அவரது சொத்து மதிப்புகள் சரிந்தது.

மேலும் அவர் அவரது பெர்க்‌ஷைர் ஹாத்வே நிறுவனத்தில் இருந்த 290 மில்லியன் ஷேர்களை பில் கேட்ஸின் தொண்டு அமைப்புக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

34 வயதாகும் மார்க் சக்கர்பெர்க்கின் மதிப்பு இப்போது இந்திய மதிப்பில் 5.61 லட்சம் கோடி ரூபாய்.

மார்க் சக்கர்பெர்க்கும், தன் வாழ்நாளில், தனக்கு ஃபேஸ்புக்கில் இருக்கும் 99% பங்குகளை நன்கொடையாக அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் பல நெருக்கடிகளை சந்தித்து வந்தபோதும், முதலீட்டாளர்களின் ஆதரவு ஃபேஸ்புக்குக்கு தொடர்ந்து இருந்துவந்தபடியால் நேற்று வத்தக நேர முடிவில், ஃபேஸ்புக்கின் பங்குகள் உச்சத்தை தொட்டது.

Top 3 Richest people in the world

1. Jeff Bezos (U.S.)
CEO, Amazon
Age: 54
Net worth: $112 billion

2. Bill Gates (U.S.)
Co-founder, Microsoft
Age: 62
Net worth: $90 billion

3. Mark Zuckerberg (U.S.)
Co-founder, Chairman and CEO, Facebook
Age: 34
Net worth: $81.6 billion

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்