நுகர்வோர்கள் பொழுதுபோக்கிற்கான ஸ்ட்ரீமிங் சேவைகளை அதிக அளவில் விரும்புகிறார்கள்,  

தற்போது Google Play Movies, iTunes மற்றும் Netflix போன்றவை ஸ்ட்ரீமிங் சேவைகளை அளித்துவருகிறது, இத் தளங்களுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில்  மூவிஸ் மற்றும் டி.வி.க்கான பிரத்யேக பயன்பாட்டை வளர்த்து வருகிறது.

இதன் மூலம் Google Play Movies, iTunes மற்றும் Netflix  போன்ற தளங்களில் காண முடியாத பல தகவல்களை மைக்ரோசாப்டின் மூலம் கண்டுகளிக்கலாம் , இதுவே  மைக்ரோசாப்ட்டின் தற்போதைய இலக்கு என்று கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட்டின் இந்த புதிய பயன்பாடு வந்தவுடன் Netflix  மற்றும் iTunes போன்ற பிற சமகாலத்தவர்களுக்கு இது கடுமையான போட்டியைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்