தமிழக பள்ளிக் கல்வி துறையின் மிகப் பெரிய சாதனையாக தற்போது பார்க்கப்படுவது யூடியூப் கல்வி முறை.

இன்றைய காலகட்டத்தில் யூடியூப் என்பது சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது, ஜியோவின் அறிமுகத்தால் அனைவரும் இன்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துக்கிறோம். திரைப்படங்கள், பாடல்கள், வேடிக்கை நிகழ்ச்சிகள் என்பதை தாண்டி யூடியூபில் ஏராளமான கல்வி சார்ந்த வீடியோக்கள் உள்ளன, இதனை சரியாக பயன்படுத்தி உள்ளது தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை.

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனுபவமிக்க ஆசியர்களால் சரியான விளக்கங்களுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் TN SCERT என்னும் யூடியூப் சேனல் தொடங்கி அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இந்த சேனலில் தமிழ்நாடு பாடதிட்டத்தில் உள்ள பாடப் புத்தக தகவல்கள் நவீன தொழில் நுடப்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு எளிமையான விளக்கத்துடன் வீடியோக்களாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

எளிய முறையில் குழந்தைகள் தங்களது பாடங்களை புரிந்துக்கொள்ள இந்த வீடியோக்கள் உதவி புரிகிறது. தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின் இந்த முயற்சி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

TN SCERT யூடியூப் சேனலில் பல்வேறு வகுப்பு பாடங்களும் ஏராளமான பாடப்பிரிவுகளுக்கும் இடம் பெற்றுள்ளன. மேலும் இதில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. NEET, JEE போன்ற தேசிய நுழைவுத் தேர்வுக்களுக்கு தங்களை தயார் செய்யும் மாணவ, மாணவிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது. TN SCERT யூடியூப் சேனல் 95K subscribers களைக் கொண்டுள்ளது, இதில் தற்போது வரை சுமார் 2,900 வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.

TN SCERT யூடியூப் சேனலின் வெற்றியை தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறைக்கென தனி தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதில் சிறந்த கல்வியாளர்களை கொண்டு கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சியைப் பார்த்து நம்முடைய அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெழுங்கானா போன்றவை திகைத்துள்ளன.

இது ஒருபுறம் இருக்க நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவாக, டெல்லியைச் சார்ந்த 12 ஆம் வகுப்பு பயிலும் தமிழக மாணவி இனியாள், aNEETa என்று பெயரிடப்பட்டுள்ள புதிய மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார். இச்செயலியில் நீட் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களும், தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

மாணவர்களுக்கான இந்த செயலி ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் உள்ளது, இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

aNEETa மொபைல் செயலியை பதிவிறக்க aNEETa– Apps on Google Play

மேலும் இக்கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு பரிந்துரைக்கவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்