ஸ்மார்ட் போன் கீழே விழுந்தா உடைந்துவிடும் என்கின்ற  பயம் இனி உங்களுக்கு வேண்டாம், வந்துவிட்டது மொபைலுக்கு ஏர்பேக்.

பெரும்பாலானா கார்களில் இருக்கும் ஏர்பேக் அமைப்பானது விபத்து ஏற்படும் போது அதன் தாக்கத்தைக்  குறைக்கும் வகையில் செயல்படும். அதே போன்ற அமைப்பு தற்போது மொபைல் போன்களுக்கும் அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ஜெர்மனியில் இருக்கும் ஆலன் பல்கலைக்கழகத்தின் மாணவரான 25 வயது பிலிப் ஃபிரென்ஸெல் கண்டுபிடித்துள்ளார். இந்த ஏர்பேக் கேஸின் உள்ளே கீழே விழுவதை உணரும் வகையில் சென்சார்கள் உள்ளன . அது மட்டுமன்றி சிலந்தியின் கால்களைப் போல காணப்படும் எட்டு ஸ்ப்ரிங்குகள் நான்கு மூலையிலும் அமைக்கப்பட்டுள்ளன..

மொபைல் கீழே விழும்போது சென்சார் அதை உணர்ந்து ஸ்ப்ரிங்குகளை விடுவிக்கும், அவை எதிர் எதிர்த் திசையில் விரிவடையும். இதன் மூலமாக மொபைலின் பின்புறமும், முன்புறமும் நேரடியாகத் தரையில் படுவது தடுக்கப்படும். கீழே விழுந்த பிறகு வெளியே வரும் ஸ்ப்ரிங்குகளை மீண்டும் அதே போலவே மடக்கி கேஸினுள் வைத்து விட முடியும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்