இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட, அரசாங்கம் சார்ந்த உதவிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு செயலிகள் குறித்து காண்போம்.

mParivahan App

mParivahan செயலி மூலம், பயனாளிகள் தங்கள் ஓட்டினர் உரிமம் மற்றும் பயனரின் நான்கு/இரு சக்கர வாகனத்தின் பதிவு சான்றிதழை டிஜிட்டல் நகலாக மாற்றி இதில் பதிவு செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் வாகனத்தின் பதிவு விவரங்களை சரிபார்க்க முடியும்.

UMANG

Unified Mobile Application for New-age Governance என்பது UMANG என்பதின் விரிவாக்கம்.

இந்த செயலியில் டிஜிட்டல் இந்தியா சேவைகளான ஆதார், டிஜிலாக்கர் போன்றவற்றை இணைக்கப்பட்டுள்ளன.

Bharat Bill Payment System, PAN, EPFO, Birth certificates மற்றும் Passport குறித்த தகவல்களையும் இதில் பெற முடியும்.

Startup India App

தொழில் முனைவோருக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த ஸ்டார்ட் அப் இந்தியா செயலி.

தொழில் முனைவோருக்கான பயன்பாட்டு வழிமுறைகளும் மற்றும் அதைச் சார்ந்த பிற தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்