சில மாதங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ப்ளூவேல் கேம் என்ற விளையாட்டு பரவியது. இந்த விளையாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

இந்நிலையில் தற்போது, மோமோ என்ற சேலஞ்ச் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இது ப்ளூவேல் கேம் போலவே தற்கொலையைத் தூண்டக் கூடிய ஒரு விளையாட்டு ஆகும்.

மோமோ சவாலில் இணையும் நபர்கள் முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும். பின்னர் மோமோ, பல உத்தரவுகளை பிறப்பிக்குமாம், நீங்கள் விளையாட மறுப்பு தெரிவித்தால், மிகவும் அச்சப்படும் வகையிலான புகைப்படங்கள் அனுப்பப்படுமாம். நீங்கள் இந்த சேலஞ்சை விளையாட துவங்கியதும் உங்கள் போன் ஹாக் செய்யப்பட்டு விடும்.

இந்த சேலஞ் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே முன்பின் அறிமுகமில்லாத எண்ணுடன் தொடர்பு கொள்ளவோ, அதனுடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்