ஜியோ வைஃபை ரவுட்டர் வாங்குபவர்களுக்கு ரூ.500 கேஷ்பேக் என்னும் சிறப்பு சலுகை அறிமுகமாகியுள்ளது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.1999 மதிப்பிலான வைஃபை ரவுட்டர் ரூ.999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்குபவர்களுக்கு மேலும் ஒரு சிறப்பு சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

ரூ.999 செலுத்தி ஜியோ வைஃபை வாங்குபவர்கள் ரூ.199 க்கான போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் நிமிடத்திற்கு 50 பைசா கட்டணத்தில் வெளிநாடுகளுக்குப் பேசும் வசதி,இலவச வாய்ஸ் கால், இலவச எஸ்.எம்.எஸ். மற்றும் 25 GB டேட்டா ஆகியவை அடங்கும். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை 12 மாதங்களுக்கு பயன்படுத்திய பிறகு ரூ.500 கேஷ்பேக் கிடைக்கும்.

இதன் மூலம் ஜியோ வைஃபை ரவுட்டர் வாங்குவதற்கான செலவு ரூ.499 மட்டுமே.

ஆனால், இச்சலுகை புதிய இணைப்புக்கு மட்டுமே பொருந்தும். அதுவும் ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுத்தால் மட்டும் இந்த கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.  ஏற்கெனவே ஜியோ பயன்படுத்துபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்